[X] Close
JUST IN
 • BREAKING-NEWS 2016 டிசம்பர் 4ஆம் தேதி மாலை 5.15 மணிக்கே ஜெயலலிதா இறந்துவிட்டார் - திவாகரன்
 • BREAKING-NEWS கமலுடன் கூட்டணி வைப்பது பற்றி காலம்தான் பதில் சொல்லும் - ரஜினிகாந்த்
 • BREAKING-NEWS இந்திய அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது தென்னாப்ரிக்க அணி
 • BREAKING-NEWS கூடுதல் பணி செய்ய போக்குவரத்து தொழிலாளர்களை கட்டாயப்படுத்துதல், விடுமுறை தர மறுப்பதற்கு விஜயகாந்த் கண்டனம்
 • BREAKING-NEWS சுகோய் போர் விமானத்தில் பறந்த அனுபவம் மறக்க முடியாதது - பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்
 • BREAKING-NEWS டெல்லி மருத்துவக்கல்லூரியில் தமிழ் மாணவர் சரத்பிரபுவின் மரணம் அதிர்ச்சி அளிக்கிறது - பா.ரஞ்சித்
 • BREAKING-NEWS இதுவரை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அனைத்து விதமான ரூ.10 நாணயங்களும் செல்லும் - ரிசர்வ் வங்கி
 • BREAKING-NEWS இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியனை சுடவில்லை என ராஜஸ்தான் கொள்ளையன் நாதூராம் வாக்குமூலம்
 • BREAKING-NEWS அரசாங்கம் என்பது அனைத்து மதங்களுக்கும் சமமான ஒரு அரசாக இருக்க வேண்டும்- விஜயகாந்த்
 • BREAKING-NEWS எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவிற்கு பிரதமரின் வருகையை உறுதி செய்ய டெல்லி செல்கிறார் ஓபிஎஸ்
 • BREAKING-NEWS டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் திருப்பூர் மாணவர் சரத்பிரபு கழிவறையில் சடலமாக கண்டெடுப்பு
 • BREAKING-NEWS கோவில்பட்டியில் பாலத்தின் மீது வேன் மோதி விபத்து- 6 பேர் பலி
 • BREAKING-NEWS சிறந்த தலைவரும், திரைப்பட கலைஞருமான எம்ஜிஆரை அவரது பிறந்த நாளில் நினைவு கூர்வோம்- மம்தா பனர்ஜி
 • BREAKING-NEWS சிவகாசியில் பட்டாசு உற்பத்தியாளர்களின் போரட்டம் 23 ஆவது நாளாக தொடர்கிறது
தமிழ்நாடு 10 Jan, 2018 02:06 PM

காவிரி நீரைப் பெற உரிய நடவடிக்கை எடுக்கப்படும்: முதலமைச்சர்

action-to-get-cauvery-water-chief-minister-answer-in-the-assembly

காவிரி நீரைப் பெற உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.

பேரவையில் திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் எழுப்பியிருந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தின்மீது பதிலளித்த முதலமைச்சர் பழனிசாமி இவ்வாறு தெரிவித்தார். தமிழகத்துக்குக் கிடைக்க வேண்டிய 192 டிஎம்சி காவிரி நீரில் தற்போது வரை 111 டிஎம்சி நீரை மட்டுமே கர்நாடகம் தந்திருப்பதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார். மீதமுள்ள 81 டிஎம்சி நீரைப் பெற தமிழக அரசு நேரடியாகவும், மத்திய அரசு மூலமும் கர்நாடகத்தை வலியுறுத்தி வருவதாகவும் தெரிவித்தார். காவிரி நீரைப் பெற உச்சநீதிமன்றம் மூலம் தமிழக அரசு தொடர்ந்து போராடி வருவதாகவும், இருக்கும் நீரைக் கொண்டு அறுவடை செய்திட அதிகாரிகள் மூலம் விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். நீர் இருப்பை மனதில் கொண்டு, சிக்கனமாக நீரை பயன்படுத்தவும் விவசாயிகளுக்கு அவர் வேண்டுகோள்விடுத்தார். தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் கடந்த 2 நாள்களாக மழை பெய்து வருவது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாகவும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close