[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ரஜினிகாந்தை சூப்பர் ஸ்டார் என்றுதான் சொன்னேன், சூப்பர் அரசியல்வாதி என்று சொல்லவில்லை: இயக்குநர் பாரதிராஜா
  • BREAKING-NEWS காவிரி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு நிறைவேற்றக்கோரி அதிமுக சார்பில் பொதுக்கூட்டம்
  • BREAKING-NEWS மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர், பதிவாளர் அறைகளில் சிபிசிஐடி போலீசார் சோதனை
  • BREAKING-NEWS டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு பணியிடங்களுக்கான 2ஆம் கட்ட கலந்தாய்வு ஏப்.25ல் நடைபெறுகிறது: தேர்வாணையம்
  • BREAKING-NEWS 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தால் தூக்கு தண்டனை
  • BREAKING-NEWS பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியில் புகார் கூறிய 4 மாணவிகளிடம் விசாரணை
  • BREAKING-NEWS தமிழக மக்களின் உரிமைகளை நசுக்கும் அரசாக மத்திய அரசு உள்ளது- கனிமொழி

தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது

the-tamil-nadu-legislative-assembly-meets-today

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது. 

இந்தாண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் என்பதால் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் கூட்டத்தொடர் தொடங்குகிறது. ஆளுநர் புரோஹித் காலை 10 மணிக்கு அவையில் உரையாற்றுவார். இதைத்தொடர்ந்து ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் தனபால் வாசிப்பார், இதன் பின் சட்டப்பேரவைத் தொடரை எவ்வளவு நாட்கள் நடத்துவது என சபாநாயகர் தனபால் தலைமையிலான அலுவல் ஆய்வுக் குழு முடிவு செய்யும். 

இதைத்தொடர்ந்து செவ்வாய்க்கிழமை முதல் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெறும். அப்போது போக்குவரத்து ஊழியர் வேலைநிறுத்தம், மாவட்டந்தோறும் ஆளுநர் ஆய்வு, ஆர்கே நகர் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் தாமதம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் பிரச்னைகளை கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்கே நகர் தொகுதியில் வெற்றிபெற்றுள்ள டிடிவி தினகரனும் முதன்முறையாக எம்எல்ஏவாக சட்டப்பேரவை நடவடிக்கைகளில் இன்று முதல் பங்கேற்கிறார். அவருக்கு 148ம் எண் இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close