[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஊடகங்களிடம் பேச அஞ்சும் பிரதமராக நான் இருக்கவில்லை; ஒவ்வொரு வெளிநாட்டு பயணம் முடிந்ததும் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியிருக்கிறேன் - முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்
  • BREAKING-NEWS ரூ.1,258 கோடியில் மதுரையில் எய்ம்ஸ் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது
  • BREAKING-NEWS 2 லட்சம் ரூபாய் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி - மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் அறிவிப்பு
  • BREAKING-NEWS மோடிதான் இந்தியாவின் அடுத்த பிரதமராக வருவார் - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.67.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ
  • BREAKING-NEWS ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி

தற்காலிக ஓட்டுநர்கள் ‌இயக்கிய 2 பேருந்துகள் விபத்து!

govt-bus-accidents-1-die-4-injured

விருதாச்சலத்தில் தற்காலிக ஓட்டுனர்கள் இயக்கிய அரசு பேருந்து மீது மற்றொரு அரசு பேருந்து மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தை அடுத்து, கடலூர் மாவட்டத்திலும் தற்காலிக ஓட்டுனர்களை பயன்படுத்தி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அவ்வாறு விருதாச்சலத்தில் இயக்கப்பட்ட ஒரு பேருந்து மீது மற்றொரு பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த 2 பேருந்துகளுக்கு இடையே சிக்கி, இருசக்கர வாகனத்தில் சென்ற ஒரு சிறுமி உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் டேவிட் சியோன் என்பவர் ‌உயிரிழந்தார். மேலும் சாலையோரம் நின்ற இருவரும் படுகாயம் அடைந்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். நிகழ்விடத்திற்கு வந்த‌ காவல்துறையினர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி அனைவரையும் க‌லைந்து போகச்செய்தனர். இந்த விபத்துக்கு அரசின் ‌நடவடிக்கையே காரணம் என கூறி அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் கடலூர் மற்றும் விருதாச்சலம் பணிமனைகள் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close