[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இந்தியாவின் சாய்னா நேவால்
  • BREAKING-NEWS நீர் மேலாண்மை குறித்து தமிழக அரசு எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பது பேராபத்தை ஏற்படுத்தும்- டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS முதலமைச்சரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது வழக்கு
  • BREAKING-NEWS குண்டர் சட்ட முறைகளை புதுவை அரசு கடைபிடிக்கவில்லை: உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.22 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.69 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கேரளா: பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு - பத்தினம்திட்டா காவல்துறை கோரிக்கையை ஏற்று ஆட்சியர் நூஹ் உத்தரவு
  • BREAKING-NEWS டெல்லியில் தசரா விழா கோலாகலம்... குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி பங்கேற்பு...

நெருங்கும் பொங்கல்: தஞ்சையில் கரும்புகள் அறுவடை

harvesting-sugar-canes-in-the-tanjore

பொங்கல் பண்டிகை நெருங்கும் வகையில் அதற்காக தஞ்சை மாவட்டத்தில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பில் பயிரிடப்பட்ட கரும்புகள் அறுவடை செய்யப்பட்டு வருகின்றன.

பொங்கல் பண்டிகை வருகிற சனிக்கிழமை தொடங்கி புதன்கிழமை வரை கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் விழாவின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக பன்னீர் கரும்பு உள்ள நிலையில், தஞ்சை மாவட்டத்தின் நூற்றுக்கணக்கான கிராமங்களில் பயிரிடப்பட்ட கரும்புகள் நன்கு வளர்ந்து அறுவடைக்குத் தயாராக உள்ளன. அவற்றை விவசாயிகள் அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தஞ்சையில் அறுவடையாகும் கரும்புகள், கட்டுகளாக கட்டப்பட்டு லாரிகள் மூலம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. 25 கரும்புகளைக் கொண்ட ஒரு கட்டு என்ற அடிப்படையில் விவசாயிகள் விலை நிர்ணயித்து விற்பனை செய்து வருகின்றனர். இந்த ஆண்டு பொங்கலுக்கு ரேஷனில் விலையில்லா பொருட்களுடன் இரண்டு அடி நீள கரும்பும் வழங்கப்படுவதற்காக கரும்பு கொள்முதல் நடைபெறுவதும் விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close