[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 62ஆவது படத்தின் பூஜை நாளை நடைபெறுகிறது
  • BREAKING-NEWS நான் இந்துக்களுக்கு எதிரானவன் அல்ல; மோடிக்கு எதிரானவன்: பிரகாஷ் ராஜ்
  • BREAKING-NEWS ஆண்டாள் விவகாரத்தில் வைரமுத்துவுக்கு ஆதரவாக ரஜினி இருந்திருக்க வேண்டும் - சீமான்
  • BREAKING-NEWS வைரமுத்துவை காரணம் காட்டி தமிழகத்திற்குள் கொல்லைப்புறமாக வர நினைத்தால் வர முடியாது - பாரதிராஜா
  • BREAKING-NEWS ஹெச். ராஜாவும், தமிழிசையும் இணைந்து மெர்சல் படத்தை சூப்பர் ஹிட் ஆக்கிவிட்டனர்- நடிகர் விஷால்
  • BREAKING-NEWS நடிகர் கமல், ரஜினி, விஷால் ஆகிய மூவரும் இணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் - பிரகாஷ்ராஜ்
  • BREAKING-NEWS ஆண்டாள் சர்ச்சை தேவையற்றது- ஓ. பன்னீர் செல்வம்
  • BREAKING-NEWS ஒகி புயலால் காணாமல்போன மீனவர்களை தேடும்பணி நிறுத்தப்பட்டுள்ளது- அமைச்சர் நிர்மலா சீதாராமன்
  • BREAKING-NEWS வடலூர் வள்ளலார் தைப்பூச ஜோதி தரிசனத்தையொட்டி ஜன.31 இல் கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
  • BREAKING-NEWS நாகலாந்து, மேகாலாயா மாநிலங்களில் பிப்-27 ஆம் தேதியும், திரிபுரா மாநிலத்தில் பிப்-18 ஆம் தேதியும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும்- தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS ஜெ.சிகிச்சையின்போது உடன் இருந்த சசிகலாவுக்குத் தான் அனைத்து உண்மைகளும் தெரியும்- வைகோ
  • BREAKING-NEWS சிவகாசியில் பட்டாசு உற்பத்தியாளர்கள் தொடர்ந்து 24வது நாளாக காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம்
  • BREAKING-NEWS டெல்லியில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறும் பட்ஜெட்டுக்கு முந்தைய கூட்டத்தில் ஓபிஎஸ் பங்கேற்கிறார்
  • BREAKING-NEWS கவிஞர் வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி 2வது நாளாக ஸ்ரீவில்லிபுத்தூரில் தொடர் உண்ணாவிரத போராட்டம்
தமிழ்நாடு 04 Jan, 2018 09:08 PM

சிறையிலுள்ள மீனவர்களை மீட்கக்கோரி முதல்வர் கடிதம்!

chief-minister-s-letter-to-rescue-fishermen

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக பிரதமருக்கு முதலமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில், அண்மையில் இலங்கையில் சிறைவைக்கப்பட்டிருந்த 79 தமிழக மீனவர்களை சொந்த ஊர் திரும்ப நடவடிக்கை எடுத்ததற்கு நன்றி தெரிவித்துள்ளார். எனினும் பாரம்பரிய கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 13 மீனவர்களையும், 2 படகுகளையும் இன்று இலங்கை கடற்படை சிறைபிடித்துச் சென்றதை உங்களின் கவனத்திற்கு கொண்டு வருதாக நரேந்திர மோடியிடம் முதலவர் கூறியுள்ளார். பாரம்பரிய கடற்பகுதியில் மீன்பிடிக்க தமிழக மீனவர்கள் அனுமதிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழக மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இலங்கை கடற்படையால் பிடித்துச் செல்லப்பட்ட 13 மீனவர்கள் உட்பட 84 மீனவர்களை உடனடியாக விடுவிக்கவும், இலங்கை வசமுள்ள159 படகுகளையும் மீட்கவும் அந்நாட்டு அரசுடன் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியை கேட்டுக்கொண்டுள்ளார்.
 

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close