[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்யும் குழுவின் முதல் கூட்டம் சென்னையில் செப்.24ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது
  • BREAKING-NEWS மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் விழா லோகோவை டெல்லியில் வெளியிட்டார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் நிபுணர் குழுவின் ஆய்வை ஒத்திவைக்க வேண்டும் என மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியத்திற்கு தமிழக மாசுக்கட்டுப்பாடு வாரியம் கடிதம்
  • BREAKING-NEWS பாஜக அரசால்தான் விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாகும் - அமித்ஷா
  • BREAKING-NEWS சுதந்திர இந்தியாவில் முதல் பெண் ஐஏஎஸ் அதிகாரி காலமானார்
  • BREAKING-NEWS சென்னையில் ஆட்டோ, ஷேர் ஆட்டோ கட்டணம் உயர்வு
  • BREAKING-NEWS புழல் சிறையில் வார்டன்கள் அதிரடி இடமாற்றம்

பொங்கலையொட்டி தற்காலிக பேருந்து நிலையங்கள் அறிவிப்பு

temporary-bus-station-announced

பொங்கல் பண்டிகையை ஒட்டி சென்னையிலிருந்து வெளியூர்களுக்கு பயணம் மேற்கொள்ளும் மக்கள் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் எளிதாக பயணம் மேற்கொள்ள தீபாவளியின்போது செய்ததுபோல பயணிகள் ஏறுவதற்கான தற்காலிக பேருந்து நிலையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

செங்குன்றம் வழியாக ஆந்திர மாநிலத்திற்கு செல்லும் பேருந்துகள் அண்ணாநகர் மேற்கில் உள்ள மாநகர போக்குவரத்து கழகப் பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்குக் கடற்கரைச் சாலை வழியாக புதுச்சேரி, கடலூர், மற்றும் சிதம்பரம் வரை செல்லும் பேருந்துகள் சைதாப்பேட்டை நீதிமன்ற பேருந்து நிறுத்தத்திலிருந்து புறப்படும் என கூறப்பட்டுள்ளது. திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் மார்க்கமாக செல்லும் அனைத்து வழித்தட பேருந்துகளும் தாம்பரம் சானிடோரியம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும்.

பூவிருந்தவல்லி வழியாக ஆற்காடு, ஆரணி, வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மற்றும் ஒசூர் போன்ற ஊர்களுக்குச் செல்லும் பேருந்துகள் அனைத்தும் பூவிருந்தவல்லி பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் என கூறப்பட்டுள்ளது. மற்ற ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் வழக்கம்போல் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இம்மாதம் 11,12 மற்றும் 13-ம் தேதிகளில் இந்த நடைமுறை பின்பற்றப்படும் என்பதால், இந்த தேதிகளில் கோயம்பேட்டிலிருந்து பயணம் மேற்கொள்ள ஏற்கனவே முன்பதிவு செய்தவர்களும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தற்காலிகப் பேருந்து நிலையங்களுக்கு சென்று பயணம் மேற்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தாம்பரம் மற்றும் பெருங்களத்தூர் பேருந்து நிலையங்களிலிருந்து பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்திருக்கும் பயணிகள் ஊரப்பாக்கம் தற்காலிக பேருந்து நிறுத்தம் சென்றடைந்து அங்கு தாங்கள் முன்பதிவு செய்த நேரத்திற்கு பேருந்துகளில் பயணம் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close