[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது அதிமுக
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல்
  • BREAKING-NEWS சென்னை ஐஐடியில் மாணவர்களின் தற்கொலைகள் குறித்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரிய மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
  • BREAKING-NEWS ராகுல்காந்தி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேர்தல் ஆணையத்தில் பாஜக சார்பில் ஸ்மிருதி இரானி புகார் மனு
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கியது மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தெர்தலில் மதிமுகவிற்கு பம்பரம் சின்னம் ஒதுக்கியது மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS தமிழகத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி சோமநாதன் மத்திய நிதி அமைச்சக செயலாளராக நியமனம்

மலர்கள் கண்காட்சிக்கு தயாராகும் மலைகளின் இளவரசி

princess-of-the-mountains-prepared-for-the-flowers-exhibition

கொடைக்கானலில் நடைபெறவிருக்கும் 57ஆவது மலர்கள் கண்காட்சிக்கு கொல்கத்தாவில் இருந்து மூவாயிரம் உயர்ரக டேலியா மலர் நாற்றுகள் வரவழைக்கப்பட்டுள்ளதாக தோட்டக் கலைத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் வரும் மே மாதம் 57 ஆவது மலர்கள் கண்காட்சி நடைபெறவுள்ளது. இதற்கான முதற்கட்ட நடவுப் பணிகள் ஏற்கனவே முடிவடைந்துவிட்டன. இரண்டாம் கட்ட நடவுப் பணிகளுக்காக கொல்கத்தாவில் இருந்து உயர் ரக டேலியா மலர் நாற்றுகள் பிரயண்ட் பூங்காவிற்கு வந்துள்ளன. கென்யா, ப்ளாக்கவுட், பிரைம் மினிஸ்டர், ஆர்தர் ஹம்லே, மொங்கள் பாண்டே, ராயல் ராஃப், சிஸ்டர் நிவேதியா, குட்டே, குட்மார்னிங், வைட் பென்சினா, மகாகாளி, மட்டகணி, க்ளோரி ஆஃப் இந்தியா உள்ளிட்ட 30 வகையான டேலியா மலர் நாற்றுகள் வந்துள்ளதாகவும், இந்த நாற்றுகள் அனைத்தும் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் இரண்டாம் கட்டமாக நடவு செய்யப்படவுள்ளன என தோட்டக் கலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த டேலியா மலர்கள் ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதிக்கு மேல் பூத்துக் குலுங்கும் எனவும் தெரிவித்தனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close