[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு
  • BREAKING-NEWS கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்
  • BREAKING-NEWS கரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை
  • BREAKING-NEWS திமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்
  • BREAKING-NEWS மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
  • BREAKING-NEWS எக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்காக நிலம் தர விருப்பம் இல்லாத விவசாயிகளை துன்புறுத்தக்கூடாது - உயர்நீதிமன்றம்

2ஜி தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு: சிபிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு

appealing-against-2g-judgment-cbi-official-announcement

2ஜி வழக்கில் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என சிபிஐ அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக சிபிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு முதல்கட்டமாக ஆய்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. குற்றச்சாட்டுகளை நிரூபிக்க சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களை நீதிமன்றம் சரியான முறையில் பார்க்கவில்லை என தோன்றுவதாக கூறப்பட்டுள்ளது. இதற்காக சிபிஐ தேவையான சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2ஜி அலைக்கற்றை ‌முறைகேடு வழக்கில் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டனர். டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓம்பிரகாஷ் சைனி இத்தீர்ப்பை வழங்கினார். ராசா, கனிமொழி உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்க சிபிஐ தரப்பு தவறி விட்டதாகவும் எனவே இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்படுவதாகவும் நீதிபதி சைனி ஒரே வரியில் தீர்ப்பை அளித்தார். ராசா, கனிமொழி தவிர கலைஞர் டிவி முன்னாள் நிர்வாகி சரத்குமார், ஷாகித் பல்வா, வினோத் கோயங்கா, ஆசிஃப் பல்வா உள்ளிட்ட 17 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close