[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி

3 மணி நேரத்தில் 21,000 மீம்ஸ்களை உருவாக்கி சாதனை

create-and-record-21-000-metes-in-3-hours

சென்னையில் நடைபெற்ற மீம்ஸ் மாரத்தான் போட்டியில் மூன்று மணி நேரத்தில் 21,619 மீம்ஸ்களை உருவாக்கி சாதனை படைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மீம்ஸ் மாரத்தான் என்ற பெயரில் போட்டி நடைப்பெற்றது. இந்தப்போட்டியில் சுமார் 6,000 பேர் தங்கள் பெயர்களை பதிவு செய்துள்ளனர். இதில் 4,300 பேர் சாதனை மாரத்தானில் பங்கேற்றனர். இதில் 2,500 பேர் முழுமையாக 3 மணி நேரமும் மீம்ஸ்களை கற்பனை வளத்துடன் தயாரித்து அளித்துக் கொண்டேயிருந்தார்கள். இவர்களின் முயற்சியால் 21,619 மீம்ஸ்களை உருவாக்கி ஏசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சாதனை படைத்திருக்கிறார்கள். 

இதுகுறித்து போட்டி ஒருங்கிணைப்பாளர் கூறுகையில், நேர்மறையாகவும், பொறுப்புணர்வுடனும் மீம்ஸ்களை உருவாக்குபர்களுக்கு உலக அளவில் சாதனையாளர்கள் என்ற அங்கீகாரம் கிடைக்கவேண்டும் என்று விரும்பியதால் உருவானது தான் ‘மீம்ஸ் மாரத்தான்’ என்ற எண்ணம். இவர்களின் அயராத உழைப்பால் நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாக 21,619 மீம்ஸ்களை உருவாக்கி ஏசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சாதனை படைத்திருக்கிறார்கள். இந்த சாதனையாளர்கள் அனைவரையும் நாங்கள் பாராட்டுகிறோம். எங்களுக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறோம்’ என்றார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close