[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி
  • BREAKING-NEWS போக்சோ சட்டத்தின் கீழ் தண்டனை பெறும் நபர்கள் கருணை மனு தாக்கல் செய்ய உரிமை அளிக்கக் கூடாது - குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
  • BREAKING-NEWS தெலங்கானா: 4 பேர் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்துள்ளது - தெலங்கானா போலீஸ்
  • BREAKING-NEWS சிலை கடத்தல் தொடர்பான ஆவணங்களை தமிழக அரசிடம் பொன் மாணிக்கவேல் ஒப்படைக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS நித்யானந்தா எங்கு இருக்கிறார் என்பதை அறிவதில் சிரமம் இருக்கிறது - மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்
  • BREAKING-NEWS புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS தெலங்கானா பெண் மருத்துவர் கொலை : 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை

மதுரையில் ரவுடிகளின் அட்டூழியத்தால் பொதுமக்கள் அச்சம்

people-are-afraid-of-the-atrocities-of-madurai

மதுரை சின்ன கண்மாய்குளம் பகுதியில் சாலையோரம் நின்றிருந்த வாகனங்களை ரவுடிகள் அடித்து நொறுக்கினர்.

மதுரை சின்ன கண்மாய்குளம் பகுதியில் உள்ள சாலையில் கத்தி, கம்பி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்த ரவுடிகள், 3 கார்கள், 2 சரக்கு வாகனங்கள், 2 இருசக்கர வாகனங்களை அடித்து உடைத்தனர். இது அங்கிருக்கும் கண்காணிப்புக் காமிராவில் பதிவாகியுள்ளது. இதேபோன்று ரவுடிகள் அடிக்கடி தொந்தரவு செய்வதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். போதையில் வரும் ரவுடிகள், வீட்டோரம் இருக்கும் வாகனங்களை அடித்து உடைப்பது மட்டுமல்லாமல், ஆயுதங்களால் அச்சுறுத்தி வருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர். கடந்த சனிக்கிழமையும் வீட்டோரம் இருந்த கார் ஒன்றை ரவுடிகள் எரித்தனர். காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து ரவுடிகளின் அட்டூழியங்களை அடக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close