[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை
  • BREAKING-NEWS சிலைக்கடத்தல் வழக்கில் ரன்வீர்ஷா கூட்டாளி கிரன்ராவின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
  • BREAKING-NEWS சபரிமலை வழக்கின் தீர்ப்பை அமல்படுத்த அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் தேவசம்போர்டு மனு தாக்கல்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.46 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.44 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
  • BREAKING-NEWS முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS கஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது

ஆய்வு மேற்கொள்ள அதிகாரம் உள்ளது: ஆளுநர் மாளிகை விளக்கம்

the-governor-has-the-power-to-conduct-the-study-governor-s-house-explanation

அரசியலமைப்புச் சட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அதிகாரிகளுடன் ஆய்வு நடத்துவதாக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

இது தொடர்பாக ஆளுநரின் கூடுதல் தலைமைச் செயலாளர் ராஜகோபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநிலத்தின் எந்த பகுதிக்கும் சென்று ஆய்வு நடத்தவும், நிர்வாகம் தொடர்பான தகவல்களை கேட்டுப் பெறவும் ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோ‌வை, நெல்லை, குமரி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் அதிகாரிகள் மற்றும் ‌பொதுமக்களை சந்தித்தது போல் மற்ற மாவட்டங்களிலும் ஆளுநர் தனது பணியை தொடர்வார் என கூறப்பட்டுள்ளது.

அரசியல் சாசனத்தில் ஆளுநருக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களை விரிவாக பட்டியலிட்டுள்ள ஆளுநர் மாளிகை, சில சூழ்நிலைகளில் ஆளுநர் அமைச்சரவையின் ஆலோசனை இல்லாமல் சுயமாக செயல்படமுடியும் என தெரிவித்துள்ளது. ஆளுநர் மத்திய அரசின் உத்தரவுக்கு அடிபணிந்து மாநில அரசின் நிர்வாகத்தில் தலையிடுவதாக எந்த ஆதாரமும் இல்லாமல் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமது ஆட்சி வரம்பிற்குட்பட்ட மாநிலத்தின் உண்மை நிலையை அறிந்து வைத்திருப்பது ஆளுநரின் கடமை எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அரசின் திட்டங்களையும், கொள்கைகளையும் செயல்படுத்த நிர்வாகம் எடுத்துக்கொள்ளும் முயற்சிகளை பல்வேறு மாவட்டங்களை ஆய்வு செய்வதன் மூலம் அறிந்துகொள்ளமுடிவதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆளுநர், மக்களின் நலனுக்காக செயல்பட்டு வருவதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close