[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடகா: இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரிய வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் பரவலாக 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சூரியனை ஆய்வு செய்ய அடுத்த ஆண்டு ஆதித்யா விண்கலம் அனுப்பப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது

குடியிருப்புகளுக்கு அருகே மதுக்கடை: கோயம்பேட்டில் 1000 பேர் போராட்டம்

koyambedu-people-protest-against-tasmac

சென்னை கோயம்பேட்டில் அடுக்குமாடி குடியிருப்பு அருகே உள்ள மதுக்கடையை அகற்றக்கோரி போராட்டம் நடைபெற்றது.

கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே உள்ள அடுக்கு‌மாடி குடியிருப்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அந்த குடியிருப்புகளின் மதில் சுவரை ஒட்டியே டாஸ்மாக் மதுபானக்கடை இருப்பதால் பெண்கள், கல்லூரி, பள்ளி செல்லும் மாணவிகள் உள்ளிட்டோருக்கு பாதுகாப்பற்ற நிலை இருப்பதாகவும், மது அருந்திவிட்டு பாட்டில்களை தங்கள் குடியிருப்புக்குள் வீசி செல்வதால் வெளியே செல்லவே அச்சமாக இருப்பதாகக் கூறுகின்றனர். மக்கள் அதிகம் கூடும் இப்‌பகுதியில் இருக்கும் இந்த டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் எனக் கோரிக்கை வைக்கின்றனர். மதுக்கடைக்கு வருவோரால் கடும் மன உளைச்சலை சந்திப்பதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close