[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வேலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
  • BREAKING-NEWS மருத்துவமனையில் அருண் ஜெட்லி.. நள்ளிரவில் அமைச்சர்கள் சந்திப்பு
  • BREAKING-NEWS அத்திவரதர் வைபவம் நிறைவு: அனந்தசரஸ் குளத்தில் இன்று வைக்கப்படுகிறது சிலை!
  • BREAKING-NEWS சாதி, மத அடையாளங்களுடன் மாணவர்கள் வந்தால் நடவடிக்கை- செங்கோட்டையன்

கோவை அரசு அச்சகத்தை மூடக்கூடாது: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

cm-palanisamy-letter-to-pm-modi-for-covai-printing-office

பிரதமர் மோடிக்கு கோவையிலுள்ள அரசு அச்சகத்தை மூடக்கூடாது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், மத்திய அமைச்சரவையின் முடிவுப்படி கோவையிலுள்ள அச்சகத்தை மூட திட்டமிடப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார். இந்த அச்சகம் 132 ஏக்கர் பரப்பளவில் திறன் வாய்ந்த தொழிலாளர்களுடன் இயங்கி வருவதாகவும் அவர் கூறியுள்ளார். 

கர்நாடகா மற்றும் கேரளாவில் அச்சகங்களை கோவையிலுள்ள அச்சகத்துடன் இணைக்க வேண்டும் என்றும், இதன் மூலம் தென்னிந்தியாவில் ஒரு அரசு அச்சகம் இருப்பதை உறுதிசெய்ய முடியும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். எனவே இவ்விவகாரத்தில் பிரதமர் தலையிட்டு மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகத்துக்கு உரிய அறிவுறுத்தல் வழங்க வேண்டும் என்றும் முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close