[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தருமபுரி: நல்லம்பள்ளி, ஏரியூர், பெரும்பாலை, கம்பை நல்லூர் பகுதியில் லேசான நில அதிர்வு
  • BREAKING-NEWS ஜம்மு- காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரால் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
  • BREAKING-NEWS சென்னை கந்தன்சாவடியில் கட்டட சாரம் சரிந்து விழுந்தது தொடர்பாக பொறியாளர்களிடம் விசாரணை
  • BREAKING-NEWS சென்னை: தனியார் மருத்துவமனை கட்டடத்தின் சாரம் சரிந்து விழுந்ததில் தொழிலாளி பலி, 28பேர் காயம்
  • BREAKING-NEWS சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114.63 அடியில் இருந்து 116.98 அடியை தாண்டியது
  • BREAKING-NEWS சேலம்: ஓமலூர், கமலாபுரம், மேச்சேரி பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது
  • BREAKING-NEWS புதுக்கோட்டை: ஆதனக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் +2 மாணவர்களிடையே மோதல்

பேனர் விவகாரம்: தமிழக அரசு மீது திமுக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

dmk-filed-case-against-tn-government

நீதிமன்றம் உத்தரவிட்டும் கோவையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கான பேனர்கள் அகற்றப்படவில்லை எனக்கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.

கோவையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்காக வைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவில் மோதி பொறியாளர் ரகு என்பவர் உயிரிழந்ததாக தொடரப்பட்ட வழக்கை கடந்த வாரம் உயர்நீதிமன்றம் விசாரித்தது. அப்போது, விதிகளை மீறி வைக்கப்பட்டிருந்த பேனர்கள், கட்அவுட்கள், அலங்கார வளைவு ஆகியவற்றை உடனடியாக அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவை பின்பற்றாமல் எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழா நடந்த டிசம்பர் 3-ஆம் தேதி வரை கோவையில் பேனர்கள் அகற்றப்படவில்லை என சிங்காநல்லூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. கார்த்திக் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். பேனர்கள் அகற்றப்படாததால் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், உள்துறை முதன்மைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி, காவல்துறை டிஜிபி டி.கே.ராஜேந்திரன், கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், கோவை மாநகர காவல் ஆணையர் பெரியய்யா உள்ளிட்ட 9 பேர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க
வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கு அடுத்தவாரம் விசாரணைக்கு வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close