[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டெல்லியில் 28 ஆவது ஜிஎஸ்டி கூட்டம் அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் தொடங்கியது
  • BREAKING-NEWS இந்தியா திருக்கோயில் என்றால், கடவுள் இருக்கும் இடம் தமிழ்நாடு- முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நிதி மசோதாவுக்கு ஒப்புதல் பெறப்பட்டு நிறைவேற்றப்படும்- புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி
  • BREAKING-NEWS ராமநாதபுரம்: மண்டபம் அருகே முயல் தீவுப் பகுதியில் ரூ.4 கோடி மதிப்புள்ள கடல் அட்டைகள் பறிமுதல்
  • BREAKING-NEWS நாடு முழுவதும் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பில் 2 ஆவது நாளாக லாரிகள் வேலைநிறுத்தம்
  • BREAKING-NEWS விருதுநகர்: ராஜபாளையம் அருகே திருவள்ளூர் நகரில் பாலியல் புகாரில் பள்ளி தலைமை ஆசிரியர் கைது

எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி மறைவு

writer-bakkiyam-ramasamy-passes-away

பிரபல எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி (ஜ.ரா.சுந்தரேசன்) நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 87.

சென்னை சேத்துபட்டில் வசித்து வந்த அவர், கிட்னி தொடர்பான பிரச்னைக்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று நள்ளிரவில் காலமானார். அவரது உடல் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. அவர் உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இறுதி சடங்கு சென்னை கீழ்ப்பாக்கத்தில் இன்று பகல் 11.30 மணிக்கு நடக்கிறது. மறைந்த ஐ.ரா.சுந்தரேசனுக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும் ஜெகன், குமார், யோகேஷ் ஆகிய மகன்களும் உள்ளனர்.

ஜலகண்டபுரம் ராமசுவாமி சுந்தரேசன் என்கிற இயற்பெயரை கொண்ட அவர், தமது தந்தை மற்றும் தாயார் பெயர்களை இணைத்து பாக்கியம் ராமசாமி என்ற பெயரில் பல்வேறு நகைச்சுவைக் கதைகள் மற்றும் புதினங்கள் எழுதியுள்ளார்.

குமுதல் வார இதழில் 37 ஆண்டுகள் பணியாற்றிய இவர் 1990-ல் ஓய்வு பெற்றார். தொடர்ந்து எழுதி வந்த இவரது அப்புசாமி -சீதாபாட்டி கேரக்டர்கள் புகழ்பெற்றவை. இவர் எழுதிய ’அப்புசாமியும் அற்புத விளக்கும்’, ’அப்புசாமியும் 1001 இரவுகளும்’, ‘அப்புசாமியும் ஆப்பிரிக்க அழகியும்’ ஆகிய நாவல்கள் பிரபலமானவை. 
சிறுவர்களுக்காக வால்ட் டிஷ்னி தயாரித்த ’அலாவுதீனும் அற்புத விளக்கும்’ என்ற கார்டூன் படத்துக்கு வசனம் எழுதியுள்ளார். 

‘அப்புசாமி -சீதாப்பாட்டி நகைச்சுவை அறக்கட்டளை’, ’அக்கறை’ ஆகிய அமைப்பையும் நடத்தி வந்தார். 


 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close