[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இந்தியாவின் சாய்னா நேவால்
  • BREAKING-NEWS நீர் மேலாண்மை குறித்து தமிழக அரசு எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பது பேராபத்தை ஏற்படுத்தும்- டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS முதலமைச்சரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது வழக்கு
  • BREAKING-NEWS குண்டர் சட்ட முறைகளை புதுவை அரசு கடைபிடிக்கவில்லை: உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.22 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.69 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கேரளா: பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு - பத்தினம்திட்டா காவல்துறை கோரிக்கையை ஏற்று ஆட்சியர் நூஹ் உத்தரவு
  • BREAKING-NEWS டெல்லியில் தசரா விழா கோலாகலம்... குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி பங்கேற்பு...

ஜெயலலிதா மரண விசாரணை: கைரேகை பெற்ற மருத்துவர் பாலாஜி விளக்கம்

doctor-balaji-explain-before-jayalalitha-dead-investigation-arumugasamy-panel

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில், மருத்துவர் பாலாஜி ஆஜராகி விளக்கமளித்தார்.

திருப்பரங்குன்றம், தஞ்சாவூர், அரவக்குறிச்சி இடைத்தேர்தலின்போது தேர்தல் ஆவணத்தில் ஜெயலலிதாவின் கைரேகையை பெற்றது குறித்த விளக்கத்தை மருத்துவர் பாலாஜி, நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது, கைரேகை பெறும் போது ஜெயலலிதாவை சந்தித்ததாக கூறினார். எய்ம்ஸ் மருத்துவர்களும், லண்டன் மருத்துவரும்தான் சிகிச்சை அளித்ததாகவும், லண்டன் கொண்டுசெல்ல வேண்டுமென்ற அறிவுறுத்தலை ஜெயலலிதா ஏற்க மறுத்துவிட்டதாகவும் பாலாஜி தெரிவித்தார்.

சசிகலா மட்டுமே இறுதி வரை உடன் இருந்ததாக கூறிய அவர், அரசு தரப்பில் அமைக்கப்பட்ட 5 பேர் கொண்ட மருத்துவ குழுவில் தான் மட்டுமே ஜெயலலிதாவை பார்த்ததாக தெரிவித்தார். ஐதராபாத், பெங்களூரு போன்ற பகுதிகளில் இருந்தும் சில மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க வந்ததாகவும், மருத்துவர் பாலாஜி விசாரணை ஆணையத்தில் தகவல் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து மீண்டும் வரும் 27ஆம் தேதி ஆஜராக பாலாஜியிடம் அறிவுறுத்தப்பட்டது.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக வரும் வாரங்களில் விசாரணைக்கு வர ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் மேலும் பலருக்கு  சம்மன் அனுப்பியுள்ளது. முதல்வர் அலுவலக தனிப்பிரிவு செயலக அதிகாரியாக இருந்த ஷீலாபாலகிருஷ்ணன், தலைமைச் செயலராக இருந்த ராம்மோகன் ராவ், அப்போலோ குழுமத் தலைவர் பிரதாப் ரெட்டி ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஜெயலலிதாக அண்ணன் மகன் தீபக்கை 14ம் தேதியும், ஜெயலலிதா அண்ணன் மகள் தீபாவை 13ம் தேதியும் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. மருத்துவர் ஷங்கர் 12ம் தேதி விசாரணைக்கு வர வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close