[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ரயில் கொள்ளை வழக்கில் கைதான 5 கொள்ளையர்களுக்கு நவம்பர் 26ம் தேதி வரை காவல் நீட்டித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS தருமபுரி : பிளஸ்2 மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இறந்த வழக்கில் சதீஷ் என்பவர் நேற்று கைதுசெய்யப்பட்ட நிலையில் 2வது நபரான ரமேஷ் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்
  • BREAKING-NEWS மத்திய அமைச்சர் அனந்த்குமார் (59) உடல்நலக்குறைவால் காலமானார்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.56 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.43 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS 3வது மற்றும் கடைசி டி-20 போட்டியில் இந்திய அணிக்கு 182 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மேற்கு இந்திய தீவுகள் அணி
  • BREAKING-NEWS அடுத்த 24 மணி நேரத்தில் ‘கஜா’ தீவிர புயலாக மாறும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS இலங்கை சுதந்திர கட்சியில் இருந்து விலகி இலங்கை பொதுஜன முன்னணி கட்சியில் இணைந்தார் ராஜபக்ச; அவருடன் முன்னாள் எம்.பி.க்கள் 50 பேரும் இணைந்துள்ளனர்

கோவை அரசு அச்சகத்தை மூட மத்திய அரசு முடிவு: தொழிலாளர்கள் எதிர்ப்பு

coimbatore-govt-of-india-press-issue

கோவை அருகேயுள்ள மத்திய அரசின் அச்சகத்தை மூடும் நடவடிக்கை கைவிட வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே பிரஸ் காலனி என்னும் பகுதியில் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய அரசு அச்சகம் செயல்பட்டு வருகிறது. அப்போதைய முதலமைச்சர் காமராஜரின் முயற்சியால் கோவைக்கு கொண்டு வரப்பட்ட இந்த மத்திய அரசின் அச்சகத்தில் ஆரம்பத்தில் ஆயிரம் பேருக்கும் மேல் பணிபுரிந்து வந்தனர். பின்னர் அச்சுப்பணிகள் குறைந்ததால் படிப்படியாக ஆட்கள் குறைக்கப்பட்டு தற்போது 65 பேர் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர். இதனால் சுமார் 134 ஏக்கர் பரப்பளவில் மிக பிரம்மாண்டமாக இயங்கி வந்த இந்த அச்சகம் களையிழந்து போனது. இங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கென கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் யாரும் தங்காததால் அனைத்தும் புதர்மண்டி போய் சேதமடைத்து காணப்படுகின்றன. பராமரிக்க ஆட்களின்றி தொழிலாளர்களுக்கான கலையரங்கம், மருத்துவமனை, பூங்காக்கள் என அனைத்தும் பாழடைந்து போயுள்ளது. ஆனால் முக்கிய அச்சக கட்டிடத்தில் மட்டும் பணியில் உள்ள குறைந்த எண்ணிகையிலான தொழிலாளர்களின் கடின உழைப்பால் இந்திய தபால் துறையின் அச்சுப்பணி உள்ளிட்ட அரசு சார்ந்த அச்சகப் பணிகள் முழுமையாக தொடர்ந்து நடைபெற்று அச்சகம் லாபத்திலேயே இயங்கி வருகிறது.

இந்நிலையில், இந்த அச்சகம் மற்றும் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் இயங்கி வரும் 17 மத்திய அரசின் அச்சகங்களை ஒருங்கிணைத்து ஐந்து அச்சகமாக்க சமீபத்தில் டெல்லியில் நடைப்பெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இங்குள்ள அச்சகத்தை மூடவும் தங்களை வடநாட்டில் உள்ள நாசிக் அச்சகத்திற்கு இடமாற்றம் செய்வதற்கும் மத்திய அரசு எடுத்த முடிவிற்கு இங்குள்ள தொழிலாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. தமிழகத்தில் உள்ள ஒரே மத்திய அரசு அச்சகத்தை மூடக்கூடாது என வலியுறுத்தி வரும் அரசியல் கட்சியினரும் பொது நல அமைப்புகளும் அச்சக தொழிலார்களுடன் இணைத்து உண்ணாவிரதம், மனித சங்கிலி போராட்டம் என பல கட்ட தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு ம.தி.மு.க பொது செயலாளர் வைகோ அச்சகத்திற்கு நேரில் வந்திருந்து இப்பிரச்சனையை மத்திய அரசின் நேரடி கவனத்திற்கு கொண்டு செல்வதாக தொழிலாளர்களிடம் உறுதியளித்தார்.

இந்நிலையில், இந்த அச்சகத்தின் செயல்பாட்டை வரும் 31ஆம் தேதியோடு நிறுத்தி விட மத்திய அரசின் வீடு மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் அச்சகத்துறை இயக்குனரகம் அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. இதில், “நாடு முழுவதும் உள்ள பதினேழு அச்சகங்களை ஐந்து அச்சகமாகும் முடிவின்படி, இம்மாதம் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் அச்சகத்தில் நிலுவையில் உள்ள அனைத்து பணிகளையும் விரைவாக முடிக்க வேண்டும். தற்போது அச்சுப்பணியில் உள்ளவர்கள் பிற அச்சகங்களுக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள். குமாஸ்தாக்கள், காவலாளிகள் மற்றும் தொழில்நுட்ப அலுவலர்கள் மட்டும் மூடப்படும் இந்த அச்சகத்தில் உள்ள இயந்திரங்களை அகற்றுவது உள்ளிட்ட பணிகள் தொடர்பாக இங்கு சிறிது காலம் பணியில் இருப்பார்கள். இதன் பின்னர் அச்சகம் உள்ள இடம், மத்திய அரசின் நிலம் மற்றும் மேம்பாட்டு அமைச்சகம் அல்லது மாநில அரசிடம் ஒப்படைக்கப்படும்” என தெரிவிக்கபட்டுள்ளது.

இந்த அதிரடி அறிவிப்பாணை தொடர் போராட்டங்களை நடத்தி வரும் தொழிலாளர்களை கடும் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழக அரசும் இங்குள்ள பிற அரசியல் கட்சிகளும் கோவையின் அடையாளமாக உள்ள இந்த அச்சகத்தை மூடும் முடிவை மத்திய அரசு கைவிட வலியுறுத்த வேண்டும், பாராளுமன்றத்தில் இதற்காக குரல் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தும் தொழிலாளர்கள், முதல் முறையாக அச்சக நிறுவனம் சார்பில் இன்று நேரிடையாக பிரதமர் மற்றும் மத்திய அச்சகத்துறை செயலருக்கு தங்களது கோரிக்கை அடங்கிய கடிதம் அனுப்பவுள்ளதாக தெரிவித்தனர். அச்சகப்பணி பணி தொடர்பான கல்வி மற்றும் பயிற்சி முடித்த இளைய தலைமுறையினருக்கு மத்திய அரசின் வேலைவாய்ப்பு தமிழகத்தில் இனி இல்லாமல் போகும் எனக்கூறும் அச்சக பணியாளர்கள், இறுதிவரை தங்களது போராட்டங்கள் தொடரும், எக்காரணம் கொண்டும் இங்குள்ள அச்சகத்தை மூட அனுமதிக்க மாட்டோம் என உறுதிபட கூறுகின்றனர்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close