[X] Close
JUST IN
 • BREAKING-NEWS டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது
 • BREAKING-NEWS சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் வரும் 26ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை ரசிகர்களை சந்திக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்
 • BREAKING-NEWS இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் 16 பேர் முதற்கட்டமாக விடுதலை
 • BREAKING-NEWS ஒகி புயலால் கடலில் சிக்கிய தமிழக மீனவர்கள் 433 பேரை காணவில்லை: உள்துறை அமைச்சகம்
 • BREAKING-NEWS எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான புகார்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்க உச்சநீதிமன்றம் அனுமதி
 • BREAKING-NEWS ராஜஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்ட ஆய்வாளர் பெரியபாண்டியனின் உடல் சென்னை வந்தது
 • BREAKING-NEWS திருச்செந்தூர் முருகன் கோயிலில் வள்ளி குகை அருகே பிரகார மண்டபம் இடிந்ததில் பெண் ஒருவர் பலி
 • BREAKING-NEWS ஜிஷா கொலை வழக்கில் குற்றவாளி அமிருல் இஸ்லாமிற்கு தூக்கு தண்டனை- எர்ணாகுளம் நீதிமன்றம்
 • BREAKING-NEWS ஜெ. மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் தீபக் ஆஜர்
 • BREAKING-NEWS விஏஓ தேர்விற்கு கன்னியாகுமரி மக்கள் விண்ணப்பிக்க காலநீட்டிப்பு செய்வது பற்றி பரிசீலிக்கப்படும் - அமைச்சர் ஜெயக்குமார்
 • BREAKING-NEWS ‘ஐஎன்எஸ் கல்வாரி’ என்ற நீர்மூழ்கிக் கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிப்பு
 • BREAKING-NEWS பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் குளிக்க 14 வது நாளாக தடை விதிப்பு
 • BREAKING-NEWS குஜராத் மாநிலத்தில் 2 வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது
 • BREAKING-NEWS வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க 2018 மார்ச் 31ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு
தமிழ்நாடு 07 Dec, 2017 11:24 AM

கன்னியாகுமரியில் 5000க்கும் அதிகமான மீனவர்கள் பேரணி

over-fishermen-rally-in-kanyakumari

ஒகி புயலால் காணாமல் போன 8 கிராமங்களை சேர்ந்த 1159 மீனவர்களை மீட்கக்கோரி 5,000-க்கும் அதிகமான மீனவர்கள் பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.

கன்னியாகுமரி கடல் பகுதியில் உருவான ‘ஒகி’ புயல் காரணமாக, பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதனால் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த ஏராளமான மீனவர்கள் மாயமாகினர். அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. மாயமான மீனவர்களில் பலர் பல்வேறு மாநிலங்களிலும் தஞ்சமடைந்துள்ளனர்.

இந்நிலையில் காணாமல் போன 8 கிராமங்களை சேர்ந்த 1159 மீனவர்களை மீட்கக்கோரி 5000-க்கும் அதிகமான மீனவர்கள் கன்னியாகுமரியில் பேரணியில் ஈடுபட்டுள்ளனர். நீரோடி முதல் இரவிபுத்தன்துறை வரையிலான 8 கிராமங்களைச் சேர்ந்த மீனவமக்கள் இந்த பேரணியில் ஈடுபட்டுள்ளனர். சின்னத்துறையிலிருந்து புறப்பட்ட இந்த பேரணி குழித்துறை ரயில் நிலையம் வரை செல்கிறது. அங்கு அவர்கள் ரயில் மறியல் போராட்டத்திலும் ஈடுபட உள்ளனர்.

மீனவர்களை மீட்பதில் மத்திய, மாநில அரசுகள் அக்கறை செலுத்தவில்லை என குற்றம்சாட்டியுள்ள அவர்கள், இன்னும் ஆயிரத்திற்கும் அதிகமான மீனவர்கள் கண்டுபிடிக்கப்பட்டாத நிலையில், மீனவர்களின் எண்ணிக்கையை அரசுகள் குறைத்து கூறுவதாக சாடினர். புயல் அடித்து ஒரு வாரம் தாண்டியும் இன்னும் தங்களது உறவினர்களை காணாமல் அவர்கள் தவித்து வருகின்றனர். அதிகாரிகள் தங்களை கண்டுகொள்ளவில்லை எனவும் அவர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். பெண்களும், குழந்தைகளும் கூட இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மீனவர்கள் உடனடியாக மீட்கப்படுவார்கள் எனவும், உடனடி நிவாரணம் வழங்கப்படும் எனவும் மீனவளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் உறுதி அளித்ததாகவும், ஆனால் இதுவரை உறுதிமொழி நிறைவேற்றப்படவில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close