[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு சட்டப்படி தண்டனை வழங்கப்படும் - தலைமை நீதிபதி
  • BREAKING-NEWS போலி பயிற்சியாளர் ஆறுமுகம் பகீர் வாக்குமூலம்
  • BREAKING-NEWS ஒப்பந்ததாரரின் இடங்களில் 174 கோடி பணம், 105 கிலோ தங்கம் பறிமுதல்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்குகிறது
  • BREAKING-NEWS கோப்பையுடன் வந்த வீரர்களை உற்சாகமாய் வரவேற்ற பிரான்ஸ்
  • BREAKING-NEWS 100 கிலோ தங்கம், ரூ.160 கோடி பணம் பறிமுதல்; ஒப்பந்ததாரரின் வீட்டில் தொடரும் சோதனை
  • BREAKING-NEWS கர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு

ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிக்க தடை கோரிய மனு தள்ளுபடி

jayalalitha-memorial-day-issue

 

ஜெயலலிதா நினைவு தினத்தை டிசம்பர் 5ஆம் தேதி அனுசரிக்க தடை கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் தேதி காலமானார். ஜெயலலிதா மரணமடைந்து நாளையுடன் ஓராண்டு நிறைவு பெறவுள்ளது. இந்நிலையில் ஜெயலலிதா நினைவு தினத்தை டிசம்பர் 5ஆம் தேதி அனுசரிக்க தடை கோரி வழக்கறிஞர் குமாரவேல் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த வாரம் மனுத்தாக்கல் செய்தார். மனுவில் ஜெயலலிதா மரணத்திலும் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகள் குறித்தும் பல சந்தேகங்கள் உள்ளன. ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை நடத்தி அறிவியல் பூர்வமாக மரணம் எந்த தேதியில் நிகழ்ந்தது என அறிவிக்கும் வரை ஜெயலலிதா நினைவு தினத்தை டிசம்பர் 5ஆம் தேதி அனுசரிக்க தடை விதிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டது.

கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்ட மனு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் கொண்ட அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர், ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 75 நாட்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் உயிரிழந்தார். இதுதொடர்பாக அப்போலோ மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இறப்பு சான்றிதழும் அளித்துள்ளது. எனவே ஜெயலலிதா நினைவு தினத்தை டிசம்பர் 5ஆம் தேதி அனுசரிக்க தடை கோரிய மனுவை  தள்ளுபடி செய்ய வேண்டும் என கூறினார்.

இதனை ஏற்ற நீதிபதிகள், விசாரணை ஆணையம் அமைக்கப்பட்ட நிலையில் பிறப்பு, இறப்பு குறித்து நீதிமன்றம் முடிவு செய்ய இயலாது எனவும் இறப்பு சான்றிதழ் அடிப்படையில் டிசம்பர் 5ல் ஜெயலலிதா நினைவு தினத்தை அனுசரிப்பதில் தலையிட முடியாது எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். மருத்துவமனை அளித்துள்ள இறப்பு சான்றிதழ் அடிப்படையில் நினைவு தினத்தை அனுசரிப்பதில் எவ்வித தவறும் இல்லை என தெரிவித்து குமாரவேலு என்பவர் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி  அமர்வு தள்ளுபடி செய்தது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close