[X] Close
JUST IN
  • BREAKING-NEWS குஜராத், ஹிமாச்சல் மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைப்பது உறுதி- உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
  • BREAKING-NEWS சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தொண்டர்கள் கொண்டாட்டம்
  • BREAKING-NEWS குஜராத்தில் மொத்த தொகுதி- 182; முன்னணி நிலவரம்- பாஜக -103, காங்கிரஸ் -78, மற்றவை-1
  • BREAKING-NEWS ஹிமாச்சலில் மொத்த தொகுதி- 68; முன்னணி நிலவரம்- பாஜக -41, காங்கிரஸ்-22, மற்றவை-5
  • BREAKING-NEWS குஜராத்தில் மொத்த தொகுதி- 182;முன்னணி நிலவரம்- பாஜக -98, காங்கிரஸ் -80, மற்றவை-4
  • BREAKING-NEWS குஜராத், ஹிமாச்சல் சட்டப்பேரவை தேர்தல்: இரண்டு மாநிலங்களிலும் பாஜக முன்னிலை
  • BREAKING-NEWS மேட்டூர் அணையின் 16 கண் உபரி நீர் போக்கியில் தேங்கிய தண்ணீரில் மூழ்கி 4 சிறுவர்கள் பலி
  • BREAKING-NEWS 8 மணிக்கு தொடங்குகிறது குஜராத், இமாச்சலில் வாக்கு எண்ணிக்கை
  • BREAKING-NEWS ஆர்.கே.நகரில் வார்டு வாரியாக மகளிர் குழு மூலம் பணப்பட்டுவாடா நடக்கிறது: தமிழிசை
  • BREAKING-NEWS இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது
  • BREAKING-NEWS கோடி கோடியாக கொட்டிக்கொடுத்தாலும் ஆர்.கே.நகரில் அதிமுக டெபாசிட் பெறாது: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS இலங்கை அணி எதிரான மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு 216 ரன்கள் வெற்றி இலக்கு
  • BREAKING-NEWS ஆர்.கே.நகரில் சர்வ சாதாரணமாக பணப்பட்டுவாடா நடக்கிறது: பொன்.ராதாகிருஷ்ணன்
  • BREAKING-NEWS பணப்பட்டுவாடா புகாரை தொடர்ந்து ஆர்.கே. நகரில் தேர்தல் சிறப்பு அதிகாரி விக்ரம் பத்ரா ஆய்வு
தமிழ்நாடு 03 Dec, 2017 08:46 PM

சென்னையை நெருங்கும் புயல்: மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

chennai-fishermen-advised-to-not-got-to-sea-by-district-management

வங்கக்கடலில் புயல் உருவாகி உள்ளதால், சென்னையில் மீனவர்கள் நாளை கடலுக்கு செல்ல வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கை அருகில் உருவான ஒகி புயல் கன்னியாகுமரி மற்றும் கேரளாவில் அதிக அளவில் பாதிப்பை உருவாக்கியுள்ளது. புயல் குறித்து அறிவிப்பு இல்லாமல் கடலுக்கு மீன்பிடிப்புக்காக சென்ற 2000க்கும் மேற்பட்டோர், கரை திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்களை மீட்கும் பணியில் இந்திய கடலோர காவல்படை ஈடுபட்டுள்ளது.

இதனிடையே, சென்னையை நோக்கி நகரக்கூடிய, புதிய புயல் சின்னம் வங்கக்கடலில் உருவாகியுள்ளது. அந்தமான் அருகே, காற்றழுத்த தாழ்வு பகுதியாக உள்ள, இந்த புயல்சின்னம், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் அதன்பின், சென்னை கடற்பகுதியை நோக்கி, நகரத் துவங்கும் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

        

இந்நிலையில், வங்கக்கடலில் புயல் உருவாகி உள்ளதால் சென்னையில் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்கச்செல்ல வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒலி பெருக்கி மூலம் கடற்கரையோரம் வசிக்கும் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், நாளை முதல் 4 நாட்களுக்கு கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என திருவள்ளூர் மாவட்ட நிர்வாகமும் அறிவுறுத்தியுள்ளது.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close