[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த ரேஷன் கடை ஊழியர்களின் ஸ்டிரைக் வாபஸ்
  • BREAKING-NEWS தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் - தனியார் லாரி உரிமையாளர்கள் சங்கம்
  • BREAKING-NEWS சபரிமலைக்கு வரும் பெண் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் - கேரள டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு
  • BREAKING-NEWS #MeToo விவகாரத்தில் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா செய்தார்
  • BREAKING-NEWS ராஜராஜ சோழனின் 1033ஆவது சதய விழாவையொட்டி அக்டோபர் 20ஆம் தேதி தஞ்சை மாவட்டத்தில் விடுமுறை - ஆட்சியர் அண்ணாதுரை
  • BREAKING-NEWS ‘இந்தியாவின் உளவு அமைப்பு என்னை கொல்ல சதித்திட்டம்’- இலங்கை அதிபர் குற்றச்சாட்டு
  • BREAKING-NEWS இன்று காலை முடங்கி மீண்டது யூ டியூப்!

2000 ரூபாய் நோட்டில் மாறுபட்ட வரிசை எண்கள்

different-numbers-printed-in-same-rs-2-000-money

திருவள்ளூர் மாவட்டம் அருகே வங்கி ஏடிஎம்-ல் பெறப்பட்ட ரூ. 2,000 நோட்டியில் இரண்டு வெவ்வேறு மாறுபட்ட வரிசை எண்ணை கண்டு பொதுமக்கள்
அதிர்ச்சியடைந்தனர். 

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி ஏ.டி.எம்.-ல், சென்னையில் பணியாற்றும் குமார் என்பவர் சம்பள பணத்தை எடுத்த போது
இரண்டு மாறுபட்ட வரிசை எண்களோடு வந்த 2000 ரூபாய் நோட்டை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் வங்கி ஏ.டி.எம். காவலாளியிடம் புகார் தெரிவித்த
போது இன்று விடுமுறை தினம் என்பதால் திங்கள் அன்று வாங்கி மேலாளரை சந்தித்து பணத்தை மாற்றி கொள்ளுமாறு கூறியுள்ளார். 

இதுகுறித்து வாடிக்கையாளர்கள் கூறுகையில், கிழிந்து ஒட்டப்பட்ட வெவ்வேறு வரிசை எண்கள் கொண்ட 2000 ரூபாய் நோட்டினை ஏ.டி.எம்.-ல். இருந்து
எடுத்துள்ளதால், அதனை இரண்டு நாட்களுக்கு பயன்படுத்த முடியாது எனவும், மளிகை, வாடகை உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு பணத்தை
பயன்படுத்த முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறினர். அத்துடன் வங்கியில் பணம் செலுத்த வரும் போது ரூபாய் நோட்டில் எழுதி இருந்தாலோ
அல்லது சிறிய அளவில் கிழிந்திருந்தாலே அதனை வங்கி அதிகாரிகள் பெற்று கொள்ளாமல் வாடிக்கையாளரிடம் திருப்பி அளிக்கும் நிலையில், ஏ.டி.எம்.-ல்.
எடுக்கப்பட்ட பணத்தின் பிழை குறித்து கேட்டால் வங்கி அதிகாரிகள் அலட்சியமாக பேசுவதாக குற்றம்சாட்டினர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close