[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வடக்கு அந்தமான், கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு அடுத்த 12 மணி நேரத்திற்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS பணத்திற்காக வாக்களிப்பது தன்னைத்தானே விற்பதற்கு சமம்: வைகோ
  • BREAKING-NEWS பாஜக நோட்டுகள், டோக்கன்களை தந்து வாக்கு கேட்காது; திட்டங்களை தந்து மட்டுமே வாக்கு கேட்கும் - தமிழிசை
  • BREAKING-NEWS நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மன்னிப்புக் கேட்டார் ஹெச்.ராஜா!
  • BREAKING-NEWS பெண்கள் கரும்பல்ல; இரும்பு என்பதை நிரூபிக்கும் காலம் வந்துவிட்டது! - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.22 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி மாவட்ட மக்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

கடலில் மாயமான 952 மீனவர்கள் மகாராஷ்டிராவில் மீட்பு

952-fishermen-rescued-in-maharastra

நடுக்கடலில் மாயமான மீனவர்களில் 952 பேர் 68 படகுகளில் பத்திரமாக கரை சேர்ந்திருப்பதாக மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன் வழக்கம்போல் தமிழகம் மற்றும் கேரளாவைச் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். அந்த நேரத்தில் ஒகி புயல் வீசியதால் அவர்கள் கடலில் சிக்கிக் கொண்டனர். கிட்டத்தட்ட 1000-க்கும் அதிகமான மீனவர்கள் கடலில் மாயமானதாக கூறப்படுகிறது.  காணாமல் போன மீனவர்களை மீட்கும் பணியில் தமிழகம் மற்றும் கேரளா மாநில அரசுகள் ஈடுபட்டு வருகின்றன. மீனவர்களை தேடும் பணிக்காக மத்திய அரசும் தேவையான உதவிகளை செய்து வருகிறது.

இந்நிலையில் நடுக்கடலில் மாயமான மீனவர்களில் 952 பேர் 68 படகுகளில் பத்திரமாக கரை சேர்ந்திருப்பதாக மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் 2 படகுகளில் தமிழக மீனவர்களும், 66 படகுகளில் கேரள மீனவர்களும் இருந்ததாக தேவேந்திர பட்நாவிஸ் தெரிவித்துள்ளார்.

வானிலை சீரானதும் அவர்கள் அனைவரும் பத்திரமாக சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும், அதுவரை மகாராஷ்டிராவில் அவர்கள் பத்திரமாக இருப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார். மீனவர்களின் பாதுகாப்புக்கு உதவியளித்தமைக்காக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், தேவேந்திர பட்நாவிஸுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close