[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அடுத்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக்கில் பங்கேற்க ரஷ்யாவுக்கு தடை
  • BREAKING-NEWS திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது: மாலையில் ஏற்றப்படும் மகா தீபத்திற்காக ஏற்பாடுகள் தீவிரம்
  • BREAKING-NEWS மக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேறியது குறித்து பிரதமர் மோடி மகிழ்ச்சி
  • BREAKING-NEWS நீண்ட விவாதத்திற்கு பிறகு மக்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நள்ளிரவில் நிறைவேற்றம்

மீனவர்களை துரிதமாக மீட்க கடற்படைக்கு நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தல்

nirmala-seetharaman-advices-to-indian-navy

கடலில் சிக்கியுள்ள மீனவர்களை துரிதமாக மீட்க கடற்படைக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தியுள்ளார்.

வங்கக்கடலில் உருவான ஒகி புயல் கன்னியாகுமரியை புரட்டி போட்டுள்ளது. அதுமட்டுமில்லால் நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களும் பல்வேறு பாதிப்புகளை சந்தித்துள்ளன. இதனிடையே ஒகி புயலுக்கு முன்னால் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் புயலின் காரணமாக கடலில் மாட்டிக்கொண்டனர். தமிழகம், கேரளாவை சேர்ந்த கிட்டத்தட்ட 1000-க்கும் அதிகமான மீனவர்கள் கடலில் சிக்கி கொண்டதால் அவர்களது உறவினர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

புயல் தொடர்பாக முன்பே எச்சரிக்கை விடுத்திருந்தால், கடலுக்கு யாரையும் அனுப்பியிருக்க மாட்டோம் என மீனவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், மீனவர்களை தேடும் பணியை தீவிரப்படுத்துமாறு, குளச்சல் துறைமுக சேதத்தை பார்வையிட வந்த சிறப்பு அதிகாரியையும் கிராம மக்கள் முற்றுகையிட்டனர். இதனிடையே கடலில் சிக்கிய 500 மீனவர்களை மீட்டுள்ளதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது. இந்நிலையில் கடலில் சிக்கியுள்ள மீனவர்களை  துரிதமாக மீட்க கடற்படைக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தியுள்ளார்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close