[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடு முழுவதும் தீபாவளி சமயத்தில் பட்டாசு வெடிக்க 2 மணிநேரம் மட்டுமே அனுமதி- உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS ஆன்லைனில் பட்டாசுகளை விற்க தடை விதித்தது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS நாடு முழுவதும் பட்டாசு விற்பனைக்கோ, தயாரிக்கவோ தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.53 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.15 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS வடக்கு அந்தமான், கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு அடுத்த 12 மணி நேரத்திற்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS பணத்திற்காக வாக்களிப்பது தன்னைத்தானே விற்பதற்கு சமம்: வைகோ
  • BREAKING-NEWS பாஜக நோட்டுகள், டோக்கன்களை தந்து வாக்கு கேட்காது; திட்டங்களை தந்து மட்டுமே வாக்கு கேட்கும் - தமிழிசை

புயல் பாதிப்புகள்: பொன்.ராதாகிருஷ்ணன் - நிர்மலா சீதாராமன் ஆலோசனை

pon-radhakrishnan-and-nirmala-sitharaman-consult-about-ockhi-damages

ஒகி புயல் பாதிப்புகளில் மீட்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் ஆலோசனை நடத்தினார்.

கன்னியாகுமரி மாவட்டம் அருகே நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஒகி புயலாக மாறி குமரி மாவட்டத்தையே புரட்டிப்போட்டுள்ளது. இதனால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கெடுத்து வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. ஆயிரக்கணக்கான மரங்களும், மின்கம்பங்களும் சாய்ந்துள்ளன. வாகனங்கள், மக்கள் வீடுகளில் இருந்த பொருட்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. பெரும்பாலான இடங்களில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. தமிழகத்தில் புயல் மீட்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருவதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். அத்துடன் தமிழகத்தின் புயல் பாதிப்புகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் கேட்டறிந்துள்ளனர்.

இதற்கிடையே, ஓகி புயலால் கடலில் சிக்கித்தவிக்கும் தமிழக மீனவர்களை மீட்க வலியுறுத்தி, மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அத்துடன் போர்க்கால அடிப்படையில் ‌மீட்புப்பணியில் ஈடுபட போதியளவு மீட்புக்கப்பல், ‌கப்பற்‌படை வீரர்கள், விமானப்படையை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினார். இதனையடுத்து மீனவர்களை மீட்க உடனடியாக வேண்டிய உதவிகளை செய்வதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close