[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்
  • BREAKING-NEWS மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
  • BREAKING-NEWS எக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்காக நிலம் தர விருப்பம் இல்லாத விவசாயிகளை துன்புறுத்தக்கூடாது - உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS கேரளாவில் கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பிஷப் பிராங்கோ பணியிடை நீக்கம் - வாடிகன் நிர்வாகம்
  • BREAKING-NEWS மொஹரம் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பகுதிகளுக்கு நாளை அரசு பொது விடுமுறை - புதுச்சேரி அரசு
  • BREAKING-NEWS இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவிப்பு

திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றம்

bharani-deepam-placed-in-thiruvannamalai

உலகப் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலையில் இன்று அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது. 

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தினமும் பல்வேறு வாகனங்களில் உற்சவ மூர்த்திகள் மாட வீதிகளில் வலம் வந்து அருள்பாலித்தனர். விழாவின் ஆறாம் நாளான 28ஆம் தேதி வெள்ளித் தேரோட்டமும், 29ஆம் தேதி பெரிய தேரோட்டமும் நடைபெற்றன. 

இந்நிலையில், கார்த்திகை தீபத்திருவிழாவின் முக்கிய விழாவான பரணி தீபம் இன்று அதிகாலை ஏற்றப்பட்டது. மாலையில் 2 ஆயிரத்து 668 அடி உயரமுள்ள அண்ணாமலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட உள்ளது. மலை மீது தீபம் ஏற்றுவதற்காக தீபக் கொப்பரை தலைச்சுமையாக நேற்று எடுத்துச் செல்லப்பட்டது. 

200 கிலோ செப்பினால் ஆன பிரம்மாண்ட கொப்பரையில் மூன்றரை டன் நெய், ஆயிரம் மீட்டர் துணியில் சுற்றிய திரி ஆகியவை மலை மீது கொண்டு செல்லப்பட்டன. மகா தீபத் திருநாளில் மலை மீது ஏற நீதிமன்ற உத்தரவின்படி 2 ஆயிரத்து 500 பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

தீபத் திருநாளை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் இன்று திருவண்ணாமலை வருவார்கள் என்பதால், 2 ஐஜிக்கள் தலைமையில் ஆயிரக்கணக்கான காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close