[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு
  • BREAKING-NEWS சத்தீஸ்கர்: பர்தாபூரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 2 பி.எஸ்.எப் வீரர்கள் உயிரிழப்பு
  • BREAKING-NEWS நியூட்ரினோ திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது- திட்ட இயக்குநர் விவேக் தத்தார்
  • BREAKING-NEWS நெல்லை: குற்றாலம் பிரதான அருவியில் வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிக்கத்தடை
  • BREAKING-NEWS காங்கிரஸ் கட்சி மூன்றாவது கூட்டணிக்கு முயற்சிப்பதாக வதந்தி பரப்பப்படுகின்றது- புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி
  • BREAKING-NEWS ஆதார் திட்டத்தினால் இந்தியாவிற்கு ரூ.90,000 கோடி மிச்சம்- இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தலைவர் சத்யநாராயணா
  • BREAKING-NEWS தமிழகத்தில் திராவிடக் கட்சிகளை யாராலும் வீழ்த்த முடியாது - தம்பிதுரை எம்.பி

தமிழக அரசு ரூ.5,000 கோடி தராமல் தாமதப்படுத்துகிறது: கார் நிறுவனம் புகார்

nissan-car-company-complaint-raise-against-tn-govt

தமிழக அரசு தங்களுக்குத் தர வேண்டிய 5 ஆயிரம் கோடி ரூபாய் பணத்தைத் தராமல் தாமதம் செய்வதாக சர்வதேச நடுவர் அமைப்பில் முறையிட நிஸ்ஸான் கார் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதற்கான நடைமுறைகளை அந்நிறுவனம் தொடங்கி விட்டதாகவும் டிசம்பர் மத்தியில் விசாரணை நடைபெறும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. ஊக்கத் தொகைகள், வரிச் சலுகைகள், இழப்பீடுகள் உள்ளிட்ட வழிகளில் ஒப்பந்தம் செய்து கொண்டபடி சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாயை தமிழக அரசு தங்களுக்கு தர வேண்டும் எனக் கூறி நிஸ்ஸான் நிறுவனம் முறையிட உள்ளதாக தெரிகிறது. எனினும் இவ்விவகாரம் சர்வதேச தீர்ப்பாயத்தின் விசாரணைக்கு செல்லும் முன்னரே தீர்வு காண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 
இப்பிரச்னை குறித்து நிஸ்ஸான் நிறுவனத்தின் தலைவர் கார்லஸ் கோஸ்ன் நேரடியாக பிரதமர் மோடியிடம் பேசியும் பலன் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக மத்திய, மாநில அரசு அதிகாரிகளிடம் பல சுற்று பேச்சுக்கள் நடத்தியும் சாதகமான முடிவு கிடைக்கவில்லை என்றும் நிஸ்ஸான் தரப்பில் கூறப்படுகிறது. 


இவ்விவகாரத்தில் சுமுகமான முறையில் தீர்வு காண இந்திய அரசுடன் இணைந்து செயல்பட தங்கள் நிறுவனம் உறுதியாக உள்ளதாகவும் நிஸ்ஸான் தெரிவித்துள்ளது. ஜப்பானை சேர்ந்த நிஸ்ஸான் நிறுவனம் ஃபிரான்சின் ரெனோ நிறுவனத்துடன் இணைந்து சென்னை ஒரகடத்தில் கார் தொழிற்சாலை அமைத்துள்ளது. இந்நிலையில் தங்களுக்கு தமிழக அரசு தர வேண்டிய பணம் தொடர்பாக பன்னாட்டு தொழில் நிறுவனங்களுக்கும் அரசுகளுக்கும் இடையே ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் சர்வதேச நடுவர் அமைப்பில் நிஸ்ஸான் கார் நிறுவனம் புகார் அளித்துள்ளது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close