[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சிபிஐ இயக்குநராக நாகேஸ்வர் ராவை தற்காலிகமாக நியமித்தது மத்திய அரசு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.44 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.15 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS நாடு முழுவதும் தீபாவளி சமயத்தில் பட்டாசு வெடிக்க 2 மணிநேரம் மட்டுமே அனுமதி- உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS ஆன்லைனில் பட்டாசுகளை விற்க தடை விதித்தது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS நாடு முழுவதும் பட்டாசு விற்பனைக்கோ, தயாரிக்கவோ தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
  • BREAKING-NEWS வடக்கு அந்தமான், கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு அடுத்த 12 மணி நேரத்திற்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் - சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னையில் மீண்டும் கனமழை: பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் என அறிவிப்பு

rain-again-hits-chennai-no-leave-for-schools

சென்னை மாநகர் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. வழக்கம்போல் பள்ளிகள் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் அடையாறு, அசோக் நகர், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம் வடபழனி, ராமாபுரம், போரூர், வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. 

வடகிழக்கு பருவமழை மீண்டும் தொடங்கியுள்ளது. நேற்று மாலை முதல் சென்னையில் மழை தொடங்கியது. மயிலாப்பூர், கோயம்பேடு , வண்ணாரப்பேட்டை, கொளத்தூர், கோடம்பாக்கம், வில்லிவாக்கம், ஊரப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது. திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர், பொன்னேரி சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்தது. அதேபோல், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்துவருகிறது.

இரவு முழுவதும் தொடர்ச்சியாக மழை பெய்தது. சில இடங்களில் கனமழை பெய்தது. மீண்டும் அரும்பாக்கம், சூளைமேடு , மாம்பாக்கம், மேடவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை முதல் கனமழை பெய்துவருகிறது. நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சென்னையில் வழக்கம்போல் பள்ளிகள் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வம் தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close