[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு - மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS திருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், பழனி ஆகிய கோயில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது!
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிரான திமுகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - தமிழக அரசு
  • BREAKING-NEWS ஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்
  • BREAKING-NEWS “மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை
  • BREAKING-NEWS நிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு

பெற்ற தாயை வீட்டிற்குள் பூட்டி விட்டு வெளியூர் சென்ற மகன்

the-son-who-went-out-of-the-house-was-locked-inside-the-house

காரைக்குடியில், பெற்ற தாயை வீட்டிற்குள் பூட்டிவிட்டு மகன் வெளியூர் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

ஓய்வுபெற்ற கிரா‌ம நிர்வாக அலுவலர் ராஜேந்திரன். இவர் தனது மனைவியுடன் பெங்களூர் செல்வதற்கு திட்டமிட்டுள்ளார். ஆனால் அவருடன் தனது தாயை அழைத்து செல்ல மனம் இல்லாததால் அவர், தனது தாய் சற்குரு அம்மாளை வீட்டில் வைத்து பூட்டி உள்ளார். அதன் பின்பு பூட்டிய வீட்டின் சாவியை எடுத்துக் கொண்டு பெங்களூர் புறப்பட்டு சென்றுள்ளார்.

பூட்டிய வீட்னுள் தனியாக இருக்க பயந்த சற்குரு அம்மாள், அக்கம் பக்கத்தினரிடம் காப்பாற்றும் படி சத்தமிட்டுள்ளார். அவரின் அழு குரலை கேட்ட அக்கம் பக்கத்தினர்  காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் பகுதிக்கு விரைந்த காவல் துறையினர், வீட்டின் பூட்டை உடைத்து மூதாட்டியை மீட்டுள்ளனர். அதன் பின்பு அவரின் விருப்பபடி மகள் வீட்டிற்குப் பத்திரமக அனுப்பி வைத்தனர். பெற்ற தாயை சொந்த மகனே வீட்டினுள் வைத்து பூட்டி விட்டு சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close