[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்
  • BREAKING-NEWS சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது
  • BREAKING-NEWS வயநாடு தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வான ராகுல் காந்தி, மக்களவையில் இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமார் முன்னிலையில் எம்.பி.யாக பதவியேற்றார்
  • BREAKING-NEWS மேற்கு வங்கம்: கொல்கத்தாவில் மருத்துவர்கள் சங்க பிரதிநிதிகளுடன் முதல்வர் மம்தா பானர்ஜி பேச்சுவார்த்தை
  • BREAKING-NEWS சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், திருச்சி, கடலூர், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலையில் அதி தீவிர அனல் காற்று வீசும் என எச்சரிக்கை
  • BREAKING-NEWS தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு
  • BREAKING-NEWS தமிழக முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை தலைவிரித்து ஆடுகிறது; அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்- டிடிவி தினகரன்

மேட்டூர் அணை திறப்பு: நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டுகோள்

mettur-dam-water-released-today

மேட்டூர் அணையிலிருந்து கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக இன்று தண்ணீர் திறக்கப்பட்டது.

மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, சுற்றுச்சுழல் துறை அமைச்சர் கருப்பணன் ஆகியோர் அணையின் மதகை திறந்து வைத்தனர். அணையிலிருந்து முதற்கட்டமாக ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. 

இதனால், சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களிலுள்ள 45 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் என பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர். கிழக்கு கால்வாய் வழியாக 27ஆயிரம் ஏக்கரும், மேற்கு கால்வாய் மூலம் 18ஆயிரம் ஏக்கரும் பயன்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தண்ணீர் குறைவாகவுள்ளதால், சிக்கனமாக பயன்படுத்த விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இன்றிலிருந்து 13 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 21 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட்டால் மட்டுமே கடைமடை பகுதிக்கு நீர் செல்லும் என விவசாயிகள் கூறுகின்றனர்.


 

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close