[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்
  • BREAKING-NEWS ராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு
  • BREAKING-NEWS கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்
  • BREAKING-NEWS கரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை
  • BREAKING-NEWS திமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்
  • BREAKING-NEWS மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
  • BREAKING-NEWS எக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

ஜல்லிக்கட்டு நடத்த உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை: அரசியல் தலைவர்கள் கருத்து

no-jallikattu-in-tamil-nadu-this-year-political-leaders-remarks

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த, மத்திய அரசு வழங்கிய அனுமதிக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இந்நிலையில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என பல்வேறு அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசு முயற்சி மேற்கொள்ளும்: தமிழிசை

ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவதற்கு தேவையான அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு மேற்கொள்ளும் என பாரதிய ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். மேலும், தமிழக மக்களின் உணர்வுகளுக்கு பாரதிய ஜனதா மதிப்பளிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

தமிழத்தில் பொங்கல் பண்டிகையொட்டி ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

தடையை திரும்பப் பெற வேண்டும்: அன்புமணி

ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் விதித்திருக்கும் தடையைத் திரும்பப் பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி கேட்டுக்கொண்டார்.

அவசரச் சட்டம் இயற்றியிருக்கலாம்: ஜி.ராமகிருஷ்ணன்

ஜல்லிக்கட்டு போட்டியை, நடத்துவது குறித்து மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டதற்குப் பதிலாக ஓர் அவசர சட்டம் இயற்றியிருக்கலாம் என்றும், பொங்கலுக்கு இன்னும் சில நாள்களே உள்ள நிலையில் இந்த இடைக்காலத் தடை உத்தரவை மாடு பிடி வீரர்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் ஆகியோர் மத்தியில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

அலங்காநல்லூரில் போராட்டம்

இதனிடையே, ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு வழங்கிய அனுமதிக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்ததை கண்டித்து அலங்காநல்லூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. காளை உரிமையாளர்களும், மாடுபிடி வீரர்களும், ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும் பொதுமக்களும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close