[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஆய்வு தொடர்பான ஆளுநரின் படம் தமிழகத்தில் 100 நாட்கள் ஓடாது: தமிமுன் அன்சாரி
  • BREAKING-NEWS 2017ஆம் ஆண்டின் உலக அழகியாக இந்தியாவை சேர்ந்த மனுஷி சில்லார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்
  • BREAKING-NEWS கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்த பிரதமரின் அரசியல் நாகரிகம் பாராட்டத்தக்கது: வைரமுத்து
  • BREAKING-NEWS ஆளுநர் ஆய்வை கூட கண்டிக்காத மாநில அரசு உடனடியாக பதவி விலக வேண்டும்: முத்தரசன்
  • BREAKING-NEWS வருமான வரி சோதனைக்கும் மாநில அரசுக்கும் சம்பந்தம் இல்லை: முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS தமிழக அரசுக்கும் போயஸ் கார்டனில் நடந்த வருமான வரித்துறை சோதனைக்கும் தொடர்பில்லை: அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS திமுக ஆட்சிக்கு வர முடியாமல் போனதற்கு சட்டம் - ஒழுங்கு சீர்கேடே காரணம்: முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS வருமான வரி சோதனை மூலம் அரசியல் ஆதாயம் தேட டிடிவி தினகரன் முயற்சி: அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS ரேஷன் கடையில் விற்கப்படும் மசூர் பருப்பை அமைச்சர்கள் வாங்கி சாப்பிடுவார்களா?- விஜயகாந்த்
  • BREAKING-NEWS இந்திய கடலோர காவல்படை சுடவில்லை என கூறிய மீனவர்களை அவமானப்படுத்துவது போல் உள்ளது: ஸ்டாலின்
  • BREAKING-NEWS ஜெ. இல்லத்தில் நடந்த சோதனையை தமிழக அரசு ஆதரிக்கிறதா? எதிர்க்கிறதா? : திருநாவுக்கரசர்
  • BREAKING-NEWS வருமானவரி சோதனையால் களங்கம் ஏற்படவில்லை; சோதனையால் களங்கம் துடைக்கப்படும்- அன்வர் ராஜா எம்.பி
  • BREAKING-NEWS போயஸ் கார்டனில் சோதனை நடக்க தினகரன் குடும்பம்தான் காரணம்: அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS மருத்துவமனையில் சிகிச்சை பெறும்போது சசிகலாவை வீடியோ எடுக்கசொன்னது ஜெயலலிதாதான்- திவாகரன்
தமிழ்நாடு 15 Nov, 2017 01:25 PM

மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு: காவல்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டம்

fishermen-protest-at-rameswaram

துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விசாரிக்க வந்த காவல்துறை அதிகாரிகளை ராமேஸ்வரம் மீனவர்கள் முற்றுகையிட்டனர்.

அதிகாரிகளுக்கு வழிவிடாமல் மீனவர்கள் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.‌ துப்பாக்கிச்சூட்டை கண்டித்து மீனவர்கள் இன்று அடையாள வேலைநிறுத்தம் நடத்திவரும் நிலையில், அங்கு கடலோர காவல் குழும அதிகாரிகள் துறைமுக பகுதிக்கு வந்தனர். அவர்களை முற்றுகையிட்ட மீனவர்கள், இந்திய வீரர்களே தங்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்தனர். 
இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, நமது கடற்படையே துப்பாக்கிச்சூடு நடத்தி இருவரை காயப்படுத்தியிருப்பது தங்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாகியுள்ளதாக மீனவர்கள் கூறுகின்றனர். நாளை கண்டன ஆர்ப்பாட்டத்தையும் மீனவர்கள் அறிவித்துள்ளனர்.

இதனிடையே மீனவர்களின் இன்றைய வேலை நிறுத்தத்தால் 5 ஆயிரம் மீனவர்களும், மீன்பிடி சார்பு தொழிலாளர்கள் 70 ஆயிரம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 கோடி ரூபாய் வர்த்தகமும் பாதிக்கப்பட்டுள்ளது.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
adgebra
Advertisement:
[X] Close