[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியீடு
  • BREAKING-NEWS கருத்துக்கணிப்புகளுக்குப்பின் பாஜக இருக்கிறது என கூறி எதிர்க்கட்சியினர் ஊடகங்களை உதாசீனம் செய்கிறார்கள் - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS கருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக வந்தாலும் பாதகமாக வந்தாலும் அதை பொருட்படுத்துவதில்லை- தமிழகத்தில் திமுக பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் என்ற கருத்துக்கணிப்பு பற்றி மு.க.ஸ்டாலின் பேட்டி
  • BREAKING-NEWS தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 284 புள்ளிகள் உயர்ந்து 11,691ல் வர்த்தகம்
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 888.91 புள்ளிகள் உயர்ந்து 38,819ல் வர்த்தகம்
  • BREAKING-NEWS டெல்லியில் இன்று ராகுல் காந்தி, சோனியா காந்தியை மாயாவதி சந்திக்கவில்லை - பி.எஸ்.பி.
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.88 காசுகளாகவும் விலை நிர்ணயம்

கொடைக்கானல் ஏரி மீன்களில் பாதரசம் கலப்பு

kodaikanal-film-factory-entertainment-issues

கொடைக்கானலில் இயங்கி‌வந்த பாதரச ஆலை 2011 ஆம் ஆண்டு மூடப்பட்டது. ஆனால், இந்த பாதரச ஆலைக் கழிவால் கொடைக்கானல் ஏரி மற்றும் பெரியகுளம் கண்மாய்களில் பிடிக்கப்படும் மீன்களில் பாதரச அளவு பன்மடங்கு அதிகரித்துள்ளதாக ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

கொடைக்கானலில் ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம் 1983 ஆம் ஆண்டு பாதரச தெர்மா மீட்டர் தயாரிக்கும் ஆலையை நிறுவியது, இந்த ஆலையின் ‌ பாதரச கழிவுகளால் பல தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டதையடுத்து, 2001 ஆம் ஆண்டு ஆலை மூடப்பட்டது. இந்நிலையில் இந்த ஆலைக்கழிவுகளால் இன்றளவும் பாதிப்புகள் ஏற்பட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில், ஹைதராபாத் ஐஐடி பேராசிரியர் அசிப் குவார்சி என்பவர் மேற்கொண்ட ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கொடைக்கானல் ஏரி மீன்களில் 31.9 முதல் 41.9 மைக்ரோகிராம் வரையில் பாதரசம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாம்பாற்றில் இருந்து நீரை பெறும் பெரியகுளம் கண்மாய்களில் உள்ள மீன்களிலும் அனுமதிக்கப்பட்ட அளவை விட 94 முதல் 165 மைக்ரோகிராம் வரையிலும் பாதரசம் கூடுதலாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரையில் ஆய்வறிக்கையினை வெளியிட்ட கொடைக்கானல் பாதரச மாசை அகற்றுவதற்கான பிரச்சார இயக்கத்தினர் பாதரசம் அதிகம் உள்ள மீன்களை உண்ணக் கூடாது என மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close