[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இலங்கை சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்ட 109 மீனவர்கள் காரைக்கால் துறைமுகம் வந்தடைந்தனர்
  • BREAKING-NEWS அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைய எம்.ஏ.சித்திக் ஐஏஎஸ் தலைமையில் ஒருநபர் குழுவை அமைத்தது தமிழக அரசு
  • BREAKING-NEWS காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காக மத்திய அரசை வலியுறுத்த சட்டப்பேரவையை கூட்ட வேண்டும் - டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS நான் பூ அல்ல விதை; என்னை முகர்ந்து பார்க்காதீர்கள் விதைத்து பாருங்கள் வளருவேன் - கமல்ஹாசன்
  • BREAKING-NEWS மதுரை மீனாட்சியம்மன் கோயில் தீ விபத்து குறித்து ஆய்வு செய்ய 5 பேர் கொண்ட குழுவை அமைத்தார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை
  • BREAKING-NEWS சென்னையில் முதல்வர் தலைமையில் மார்ச்.5,6,7 ஆம் தேதிகளில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு நடைபெறும் என அறிவிப்பு
  • BREAKING-NEWS தமிழக அரசியல் களத்தில் கவர்ச்சிகரமான காகிதப் பூக்கள் மலரலாம்; ஆனால் மணக்காது- மு.க ஸ்டாலின்

அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யக்கோரிய வழக்கு தள்ளுபடி

ministers-need-dismiss-case-was-dismissal

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை தொடர்பாக தவறான தகவல்களை வழங்கிய அமைச்சர்களை பதவி நீக்கக்கோரி தொடரப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஜெயலலிதா சிகிச்சை தொடர்பாக அமைச்சர்கள் தவறான தகவல்கள் வழங்கியதாக, சென்னையை சேர்ந்த ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி மனோகரன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், சிகிச்சையின்போது ஜெயலலிதா வழக்கமான உணவு எடுத்துக் கொண்டார் என்று சசிகலா தங்களிடம் கூறியதையே மக்களுக்கு தெரிவித்தோம் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், கடந்த செப்டம்பரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசியதோடு, முன்னர் தவறான தகவல்களை அளித்ததற்காக மன்னிப்பு கேட்டதும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. அதேபோல், அமைச்சர் கே.சி. வீரமணியும் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது நாங்கள் யாரும் பார்க்கவில்லை எனத் தெரிவித்ததும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அமைச்சர்களின் இந்த பேச்சு அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்றும், பதவியேற்பு உறுதிமொழிக்கு எதிராக அவர்களின் நடவடிக்கைகள் இருப்பதால் அமைச்சர்களை பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. ‌இந்த வழக்கு நீதிபதி கே.ரவிசந்திரபாபு முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு விசாரணை ஆணையம் அமைத்துள்ளதை நீதிபதி சுட்டிக்காட்டினார். மேலும் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுப்பது ஆளுநரின் அதிகாரத்திற்கு உட்பட்டது என்றும், அதில் நீதிமன்றம் தலையிட முடியாது எனவும் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close