[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஒரு அரசாங்கமே திருடுவது குற்றம்தான்; கண்டுபிடித்த பின் அதை நிரூபிக்காமல் போவதும் குற்றம்தானே ஆராய்ச்சி மணி அடித்தாயிற்று: கமல்ஹாசன்
  • BREAKING-NEWS உலக அழகியாக தேர்வான இந்தியாவின் மனுஷி சில்லாருக்கு காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து
  • BREAKING-NEWS சர்ச்சைக்குள்ளான பத்மாவதி திரைப்படம் டிசம்பர்.1இல் வெளியாகவிருந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு: இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி
  • BREAKING-NEWS தமிழகத்தில் ஜெயலலிதாவின் ஆட்சி நடக்கும்போது அவரது அறையில் சோதனை என்பது அதிகாரவரம்பு மீறிய செயல்: திருமாவளவன்
  • BREAKING-NEWS அரசின் கைகளில் வேதா இல்லம் உள்ளது , அதற்கு யாரும் உரிமை கொண்டாட முடியாது: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
  • BREAKING-NEWS தமிழகத்தில் பாடத்திட்ட மாற்றத்தை முதல்வர் பழனிசாமி நாளை தொடங்கி வைக்கிறார்: அமைச்சர் செங்கோட்டையன்
  • BREAKING-NEWS போயஸ் கார்டன் இல்லத்தை கோயில் என்று கூறுவதை ஏற்க முடியாது: ஈவிகேஎஸ் இளங்கோவன்
  • BREAKING-NEWS இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட்: முதல் இன்னிங்ஸில் இலங்கை 294 ரன்களுக்கு ஆல் அவுட்
  • BREAKING-NEWS ஆளுநர் கோவையில் மேற்கொண்டது ஆய்வு இல்லை; கலந்துரையாடல்- ஹெச்.ராஜா
  • BREAKING-NEWS திமுக தலைவர் கருணாநிதி அழைத்தால் மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபடுவேன்- மு.க. அழகிரி
  • BREAKING-NEWS அதிமுகவை அழிக்க பிறந்தவர்கள் யாரும் இல்லை: தம்பிதுரை எம்.பி
  • BREAKING-NEWS இன்றைய(நவ.,19) விலை: பெட்ரோல் ரூ.72.07, டீசல் ரூ.61.41
  • BREAKING-NEWS மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,280 கன அடியில் இருந்து 1,600 கன அடியாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS புதுச்சேரி நெட்டப்பாக்கம் பகுதியில் ஆய்வுக்கு சென்ற ஆளுநர் கிரண்பேடியை மக்கள் முற்றுகையிட முயற்சி
தமிழ்நாடு 13 Nov, 2017 01:38 PM

ஊரகப் பகுதியில் டாஸ்மாக் கடைகள்: உச்சநீதிமன்றம் அனுமதி

supreme-court-accept-tn-govt-explaination-and-allows-tasmac-shops-in-rural-nh

ஊரகப் பகுதிகளில் உள்ள மாநில, தேசிய நெடுஞ்சாலைகளில் டாஸ்மாக் கடைகளை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 

தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் 500 மீட்டருக்குள் டாஸ்மாக் கடைகளை மூடுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பேரில் கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 500 மீட்டருக்குள் இருந்த டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. தமிழகத்திலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டன. தேசிய நெடுஞ்சாலைகளை, மாநில நெடுஞ்சாலைகளாக மாநில அரசுகள் மாற்றிக் கொள்ளலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவை சுட்டிக் காட்டி தமிழகத்தில் புதிதாக டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.

இதனையடுத்து, உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. தேசிய நெடுஞ்சாலைகளில் மதுபானக் கடை திறக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், அதைத் தவறாகப் புரிந்துகொண்டு தமிழக அரசு செயல்படுவதாகவும், மாநில நெடுஞ்சாலைகளாக மாற்றி புதிய டாஸ்மாக் கடைகளைத் தமிழக அரசு திறந்துவருவதாகவும் கூறப்பட்டிருந்தது. 

இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள தேசிய மாநில சாலைகளில் புதிய டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இதனையடுத்து, தமிழகத்தில் நெடுஞ்சாலைகளை ஊரக சாலைகளாக மாற்றி டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு உயர்நீதிமன்றம் விதித்த தடையை எதிர்த்து  உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது.

     

அப்போது, தமிழக அரசின் விளக்கத்தை ஏற்று, நெடுஞ்சாலைகளை ஊரக சாலைகளாக மாற்றி டாஸ்மாக் கடை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. எழுத்துப்பூர்வமான தீர்ப்பு ஒரிரு நாளில் வழங்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் உள்ள தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தில் சுமார் 1000 கடைகள் புதிதாக திறக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
adgebra
Advertisement:
[X] Close