[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 2124 டன் கந்த அமிலம் அகற்றம்
  • BREAKING-NEWS அரசின் எந்த துறையையும் ஆளுநர் விமர்சித்தது இல்லை: ஆளுநர் மாளிகை விளக்கம்
  • BREAKING-NEWS கர்நாடக முதல்வர் அழுது புலம்பினாலும் செல்லாது - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS சமூகத்தின் மிகப்பெரிய பிரச்னை சாதி; நாட்டில் இன்னும் சாதி வேற்றுமை உள்ளது - ப.சிதம்பரம்
  • BREAKING-NEWS பாஜகவின் பலத்தை எதிர்க்கட்சிகளால் எதிர்கொள்ள முடியாது- தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS மாநில உரிமைகளில் ஆளுநர் தொடர்ந்து தலையிடுவதை பொறுத்துக்கொள்ள முடியாது- மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS மதுரையில் அமைக்கப்பட உள்ள் எய்ம்ஸ் போல் மேலும் ஒரு எய்ம்ஸ் வந்தாலும் நல்லதுதான் - டிடிவி தினகரன்

தவறான சிகிச்சையால் கேள்விக்குறியான மாற்றுத்திறனாளி பெண்ணின் எதிர்காலம்

physically-challenged-woman-under-wrong-operation-result-life-hake

மாற்றுத்திறனாளி பெண் ஒருவருக்கு மருந்து, மாத்திரைகளால் குணப்படுத்த வேண்டிய நோய்க்கு, தவறாக அறுவை சிகிக்சை செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திருச்சி மணிகண்டம் பகுதியில் காய்கறி விற்கும் மாற்றுத்திறனாளி பெண் அகிலா. இவர் கணவரை இழந்த நிலையில் தனது 7 வயது மகனை பெற்றோர் துணையுடன் வளர்த்து வருகிறார். கடந்த ஜூலை மாதம் மாதவிடாய் பிரச்சனை காரணமாக திருச்சி அரசு பொது மருத்துவமனையில் சிசிக்சை பெற்றிருக்கிறார். மருத்துவர்களின் பல கட்ட சோதனைகளுக்கு பிறகு இவருடைய கர்ப்பப்பை அகற்றப்பட்டிருக்கிறது. ஆனால் அறுவை சிகிச்சை நடைபெற்ற நாள் முதலே அகிலா வேறுவிதமான உடற்பாதிப்புகளுக்கு ஆளாகியிருக்கிறார்.

தனியார் மருத்துவர்களிட‌ம் பரிசோதித்த போது, சிகிக்சையில் தவறு நடந்திருப்பது தெரியவந்திருக்கிறது. உடல்நலம் பாதித்து வீட்டிலேயே முடங்கியுள்ள அகிலா, வருமானம் ஏதும் இல்லாத நிலையில் மகனுடன் கஷ்டத்தை சுமப்பதாக வேதனையுடன் கூறுகிறார். 

மாவட்ட ஆட்சியர் ராசாமணியிடம் அகிலா புகார் தெரிவித்ததையடுத்து, மீண்டும் அறுவை சிகிச்சைக்காக ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அகிலாவை பரிசோதித்த சிறுநீரக நிபுணர், தற்போது அறுவை சிகிச்சை செய்தால் உயிருக்கே ஆபத்து என்று தெரிவித்துள்ளார். தனி அறையில் 3 மாதம் சிகிச்சை அளிக்க மருத்துவமனை ஒப்புக்கொண்ட நிலையில், அதனை மறுத்த அகிலா, தனக்கு உரிய இழப்பீடு வேண்டுமென உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட அகிலா கூறும்போது, தொடர்ந்து சிறுநீர் வெளியேறுவதால் நாப்கினுக்கு மட்டும் ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் செலவாகிறது என்றும், கடந்த 4 மாதங்களில் 2 லட்ச ரூபாய் கடன் வாங்கியிருப்பதாகவும் கூறினார்.

கருப்பையில் நீர்க்கட்டி மட்டுமே இருந்தது எனவும், மாத்திரை சாப்பிட்டிருந்தால் குணப்படுத்தியிருக்கலாம் என்றும் தற்போது மருத்துவர்கள் கூறுவது அகிலாவிற்கு உச்சகட்ட வேதனையாக உள்ளது.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close