[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 22 ஆம் தேதி கல்லணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும்- அமைச்சர் துரைக்கண்ணு
  • BREAKING-NEWS நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிரான வாக்கெடுப்பு மாலை 6 மணிக்கு நடைபெறும்
  • BREAKING-NEWS புதிய தலைமுறை செய்தி எதிரொலி: கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணை நீர்தேக்க பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளிய 2 மினி லாரிகள் பறிமுதல்
  • BREAKING-NEWS புதுக்கோட்டையில் ஆளுநர் ஆய்வுக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் கைது
  • BREAKING-NEWS குமரி: பெருஞ்சாணி அணையில் உபரி நீர் திறப்பால் தாமிரபரணி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS தமிழகத்திற்கான முன்னேற்ற திட்டங்களை ரஜினி ஆதரிக்கிறார்; அதற்கு நன்றி- தமிழிசை
  • BREAKING-NEWS டீசல் விலை உயர்வு, சுங்க கட்டணம் உயர்வை குறைக்கக்கோரி நாடு முழுவதும் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பில் லாரிகள் வேலைநிறுத்தம்

கல்லூரிக்குள் புகுந்த காட்டு யானை: அலறியடித்து ஓடிய மாணவர்கள்..!

elephant-enter-into-college

கூடலூர் அருகே கல்லூரி வளாகத்திற்குள் புகுந்த ஒற்றைக் காட்டுயானையை வனத்துறையினர் காட்டுப் பகுதிக்கு விரட்டினர்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகேயுள்ள கோழிபாலம் பகுதியில் பாரதியார் பல்கலைகழக கலை அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. கல்லூரி வளாகத்திற்குள் பிற்படுத்தப்பட்டோர் மாணவர்கள் விடுதியும் செயல்பட்டு வருகின்றது. இந்த நிலையில் இன்று காலை கல்லூரி வளாகத்திற்குள் திடீரென ஒற்றை காட்டு யானை புகுந்தது. அந்த நேரம் கல்லூரி மாணவர்கள் மைதானத்தில் விளையாடி கொண்டு இருந்தனர். கல்லூரிக்குள் புகுந்த யானை அங்கும் இங்குமாக ஓடியது. இதனால் மாணவர்கள் அச்சத்தில் அலறியடித்து ஓடினர். இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஒற்றை யானையை பட்டாசு வெடித்து வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர். தகவல் அறிந்து காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு வந்தனர். இதனால் கல்லூரி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close