[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 3ஆவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பேட்டிங்
  • BREAKING-NEWS நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது எனும் விவாதம் தேவையில்லாதது, மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும் - நடிகர் சிம்பு
  • BREAKING-NEWS சென்னை வரும் பிரதமர் மோடியை வரவேற்க முதல்வர், துணை முதல்வர் சென்னை விமான நிலையம் வருகை
  • BREAKING-NEWS ஏப்ரல்.4ஆம் தேதி நெடுவாசல் மக்களை சந்திக்க மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் முடிவு
  • BREAKING-NEWS இவ்வளவு நாட்களாக சத்ரியனாக பார்த்த என்னை இனி சாணக்கியனாக பார்க்க போகிறீர்கள்- டி. ராஜேந்தர்
  • BREAKING-NEWS அரிதாரம் பூசிய வண்ண பலூன்கள் பார்க்க நன்றாகத்தான் இருக்கும்- துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்
  • BREAKING-NEWS நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கிய கச்சத்தீவு அந்தோணியார் கோயில் திருவிழா நிறைவு

நல்லூர் ஏரியின் கரைகளில் உடைப்பு

nallur-breakthrough-on-the-banks-of-the-lake

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே நல்லூர் ஏரி உடைந்து தண்ணீர் வெளியேறியதால் விளைநிலங்கள் சேதமடைந்துள்ளன. 

110 ஏக்கர் பரப்பளவு கொண்ட நல்லூர் ஏரியின் இரண்டாவது மதகில் நேற்று கசிவு ஏற்பட்ட நிலையில், இன்று அதிகாலை மதகின் அருகே கரை உடைந்து தண்ணீர் வெளியேறியது. தற்போது ஏரிக்கு அருகே 15 ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர்கள் முழுவதும் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். மேலும், நல்லூர் ஏரிப் பாசனத்தை நம்பியே இப்பகுதியில் 160 ஏக்கர் நிலங்களில் சாகுபடி செய்யப்படும் என்றும் தற்போது தண்ணீர் முழுவதும் வெளியேறியதால் விவசாயம் செய்வது கேள்விக்குறியாக இருப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

நேற்று கசிவு ஏற்பட்டபோதே அதிகாரிகள் வந்து ஏரிக்கரையை சீரமைத்திருந்தால் கரைகளில் உடைப்பு ஏற்பட்டிருக்காது என்றும் அதிகாரிகளின் அலட்சியத்தின் காரணமாகவே ஏரியிலிருந்து தண்ணீர் முழுவதும் வெளியேறியதாக விவசாயிகள் புகார் கூறுகின்றனர். தற்போது சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் விரைந்துள்ள நிலையில், இனி பெய்யும் மழையிலாவது ஏரி நிரம்பும் வகையில் கரைகளை பலப்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close