[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 2124 டன் கந்த அமிலம் அகற்றம்
  • BREAKING-NEWS அரசின் எந்த துறையையும் ஆளுநர் விமர்சித்தது இல்லை: ஆளுநர் மாளிகை விளக்கம்
  • BREAKING-NEWS கர்நாடக முதல்வர் அழுது புலம்பினாலும் செல்லாது - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS சமூகத்தின் மிகப்பெரிய பிரச்னை சாதி; நாட்டில் இன்னும் சாதி வேற்றுமை உள்ளது - ப.சிதம்பரம்
  • BREAKING-NEWS பாஜகவின் பலத்தை எதிர்க்கட்சிகளால் எதிர்கொள்ள முடியாது- தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS மாநில உரிமைகளில் ஆளுநர் தொடர்ந்து தலையிடுவதை பொறுத்துக்கொள்ள முடியாது- மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS மதுரையில் அமைக்கப்பட உள்ள் எய்ம்ஸ் போல் மேலும் ஒரு எய்ம்ஸ் வந்தாலும் நல்லதுதான் - டிடிவி தினகரன்

தமிழ் இருக்கைக்காக நிதி அளித்த ஆட்டோ டிரைவர்

madurai-auto-driver-is-giving-for-harvard-tamil-chair-fund

மதுரையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்காக நிதி வழங்கி இருக்கிறார். அவரது செயலைப் பாராட்டி வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன. 

மதுரை திருப்பரங்குன்றம் சாலையில் உள்ள சொக்ககொத்தான் ஊரணியை சேர்ந்த 61 வயதான வெங்கடசாமி கடந்த 27 வருடங்களாக ஆட்டோ ஒட்டி வருகிறார். இவருக்கு ராமனுஜம்மாள் என்கிற மனைவியும் சேஷ்பிரியா என்கிற மகளும் உள்ளனர், ஆட்டோ ஓட்டுவதால் இவரின் சொற்ப வருமானத்தில் குடும்பத்தினை நடத்தி வரும் வெங்கடசாமி நாளிதழ்களில் படிக்கும் போது அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் கல்விசார் இருக்கை அமைக்க நிதியுதவி கோரப்பட்டுள்ளது அவருக்குத் தெரிய வந்தது. இதனையடுத்து அவர் தன் மகளிடம் கூறி அக்டோபர் 29 ஆம் தேதி இணைய வழியே Tamil Chair Inc என்கிற முகவரிக்கு அமெரிக்காவின் மதிப்பில் 16 டாலர் அனுப்பி உள்ளார். இந்திய ரூபாயின் மதிப்பில் 1070 வரும். ஏதோ உதவி கேட்டு உள்ளனர். அதனால் அனுப்பி வைத்து இருந்தோம் என நினைத்தவருக்கு முகநூல் வழியே பாரட்டுகள் குவிய துவங்கிய பின்னர் தான் நிதியுதவியின் ஆழம் இவருக்கு புரிந்துள்ளது. 

தமிழக அரசின் சார்பில் ரூ.10 கோடி கொடுக்கப்பட்டது உட்பட பல தரப்பில் இருந்தும் நிதியுதவி அளிக்கப்படாலும் இந்த ஏழ்மை சுழலில் ஆட்டோ ஓட்டுனர் வெங்கடசாமியின் நிதியுதவி மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. இது குறித்து வெங்கடசாமி, "நிதியுதவி தேவை என்பதை நாளிதழ்களில் படித்தேன். ஆனால் எப்படி அனுப்புவது என தெரியவில்லை. என் மகளிடம் விபரங்களைக் கேட்டு அனுப்பி வைத்தேன். நிதியுதவியை அனுப்ப இன்னும் 200 நாட்கள் உள்ளது என சொல்கிறார்கள். ஒரு நபர் ஆயிரம் ரூபாய் அனுப்பினால் தேவையான தொகை சேர இவ்வளவு நாட்கள் தேவையில்லை. 10 நாட்களில் அனுப்பி விடலாம். எனது கஷ்ட சுழலிலும் இந்தத் தொகை அனுப்பி வைத்துள்ளேன். நல்ல விசயத்திற்காக இது போன்ற நிதியுதவி அனுப்புவதில் தவறில்லை. தமிழ் இருக்கை குறித்த விழிப்புணர்வு மக்களிடம் இருந்தால் இன்னும் நிறைய நிதியுதவி கிடைக்கும்" எனக் கூறினார்.

இவரது மகள் சேஷ்பிரியா, "உலக அளவில் தமிழ் பரவ வேண்டும் என்பது எங்களுடைய ஆசை. ஆகையால் இந்த நிதியுதவியை அளித்து உள்ளோம். ஏதோ எங்களால் முடிந்த இந்த சின்ன உதவியை செய்து உள்ளோம். அதே போல் அனைவரும் உதவி செய்தால் நமது தமிழை வளர்க்கலாம்" எனக் கூறினார்

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close