[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 2124 டன் கந்த அமிலம் அகற்றம்
  • BREAKING-NEWS அரசின் எந்த துறையையும் ஆளுநர் விமர்சித்தது இல்லை: ஆளுநர் மாளிகை விளக்கம்
  • BREAKING-NEWS கர்நாடக முதல்வர் அழுது புலம்பினாலும் செல்லாது - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS சமூகத்தின் மிகப்பெரிய பிரச்னை சாதி; நாட்டில் இன்னும் சாதி வேற்றுமை உள்ளது - ப.சிதம்பரம்
  • BREAKING-NEWS பாஜகவின் பலத்தை எதிர்க்கட்சிகளால் எதிர்கொள்ள முடியாது- தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS மாநில உரிமைகளில் ஆளுநர் தொடர்ந்து தலையிடுவதை பொறுத்துக்கொள்ள முடியாது- மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS மதுரையில் அமைக்கப்பட உள்ள் எய்ம்ஸ் போல் மேலும் ஒரு எய்ம்ஸ் வந்தாலும் நல்லதுதான் - டிடிவி தினகரன்

மதுரை அருகே தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

bomb-threat-to-private-schools-in-madurai

மதுரை மாவட்டம் சிம்மக்கல் அருகே ‌உள்ள தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இன்று காலை பள்ளியை தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்ட மர்ம நபர், சற்று நேரத்தில் பள்ளியில் வெடிகுண்டு ஒன்று வெடிக்க இருப்பதா‌க எச்சரித்திருக்கிறார். தகவலறிந்து சென்ற வெடிகுண்டு தடுப்பு பிரிவினர்,‌ மோப்ப நாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டனர். இரண்டரை மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற சோதனையில், அங்கு வெடிகுண்டு ஏதும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பள்ளி வளாகத்திற்கு வெளியே நிற்க வைக்கப்பட்டிருந்த மாணவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

இதேபோல் சுப்பிரமணி‌யபுரத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட மற்றொரு பள்ளியிலும் சோதனை நடைபெற்றது. வெடிகுண்டு குறித்த செய்தி அறிந்ததும் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை வீட்டி‌ற்கு அழைத்துச் சென்றனர். இதனால் அங்கு ‌‌போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close