[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ரஜினிகாந்தை சூப்பர் ஸ்டார் என்றுதான் சொன்னேன், சூப்பர் அரசியல்வாதி என்று சொல்லவில்லை: இயக்குநர் பாரதிராஜா
  • BREAKING-NEWS காவிரி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு நிறைவேற்றக்கோரி அதிமுக சார்பில் பொதுக்கூட்டம்
  • BREAKING-NEWS மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர், பதிவாளர் அறைகளில் சிபிசிஐடி போலீசார் சோதனை
  • BREAKING-NEWS டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு பணியிடங்களுக்கான 2ஆம் கட்ட கலந்தாய்வு ஏப்.25ல் நடைபெறுகிறது: தேர்வாணையம்
  • BREAKING-NEWS 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தால் தூக்கு தண்டனை
  • BREAKING-NEWS பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியில் புகார் கூறிய 4 மாணவிகளிடம் விசாரணை
  • BREAKING-NEWS தமிழக மக்களின் உரிமைகளை நசுக்கும் அரசாக மத்திய அரசு உள்ளது- கனிமொழி

இன்றும் தொடர்கிறது ஐடி ரெய்டு

it-searches-continue-on-properties-of-sasikala

டிடிவி தினகரன் மற்றும் அவரது உறவினர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் நடத்தும் சோதனை இன்றும் தொடர்கிறது. 

சென்னையில் இளவரசியின் மகன் விவேக்கின் நிர்வாகத்தில் இருக்கும் ஜெயா டிவி அலுவலகத்தில் நேற்று காலை முதல் சோதனை தொடர்ந்து நடைபெற்று ‌வருகிறது. அவரது நிர்வாகத்தில் இருக்கும் ஜாஸ் சினிமாஸ் அலுவலகத்தில் இரவு வரை நடைபெற்றது. நமது எம்ஜிஆர் அலுவலகத்தில் நள்ளிரவு 2 மணி வரை நடைபெற்ற சோதனை, இன்று காலை மீண்டும் சோதனை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தியாகராயநகரில், இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியா வீடு மற்றும் மகாலிங்கபுரத்தில் அவரது மகன் விவேக் வீட்டில் தொடர்ச்சியாக சோதனை நடைபெற்று வருகிறது. ‘

இளவரசியின் மகள் ஷகிலாவின் நிர்வாகத்தில் இயங்குவதாகக் கூறப்படும் மிடாஸ் நிறுவனத்தில் இரவில் சோதனை நிறுத்தப்பட்டு மீண்டும் காலையில் தொடங்குகிறது. புதுச்சேரியில் டிடிவி தினகரனின் பண்ணை வீட்டில் இரவு வரை நடத்தப்பட்ட சோதனையைத் தொடர்ந்து ஒரு அறைக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். அங்கு மீண்டும் இன்று சோதனை நடைபெறுகிறது. 

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இருக்கும் டிடிவி தினகரன் வீட்டில் இரவு வரை சோதனை நடைபெற்றது. அங்கிருக்கும் சசிகலாவின் சகோதரர் திவாகரனின் வீடு மற்றும் கல்லூரியில் நள்ளிரவு 2 மணி வரை சோதனை நடைபெற்றது. இன்று மீண்டும் சோதனை செய்ய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். 

திருச்சியில் இளவரசியின் சம்மந்தி கலியபெருமாள் மற்றும் சிவக்குமார் வீடுகளில் நள்ளிரவு வரை சோதனை நடைபெற்றது. நாமக்கல்லில் சசிகலாவின் வழக்கறிஞர் செந்தில் வீட்டில் இரவு வரை சோதனை நடத்திய வருமானவரித்துறையினர் இன்று காலை மீண்டும் தொடர்கின்றனர்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close