[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கல்கி ஆசிரமத்துக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.20 கோடி பறிமுதல் - வருமானவரித்துறை
  • BREAKING-NEWS திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கொள்ளை வழக்கு: கொள்ளையன் முருகனை 8 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க பெங்களூரு குற்றவியல் நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS கோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தராக பி.காளிராஜை நியமித்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
  • BREAKING-NEWS இனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு

குழந்தை பெற்றெடுத்த 3 நாட்களில் டெங்குவால் தாய் உயிரிழப்பு

dengue-has-died-in-3-days-after-the-baby-s-birth

விழுப்புரத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த பெண் ஓருவர் குழந்தை பெற்றெடுத்த மூன்று நாட்களில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

விழுப்புரம் மாவட்டம் முதலூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ். இவரின் மனைவி கவிதா, நிறைமாத கர்ப்பிணியாக இருந்த போது டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இவருக்கு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மூன்று தினங்களுக்கு முன்பு ஆண்குழந்தை பிறந்தது. இதனால் கவிதாவிற்கு காய்ச்சலின் தாக்கம் அதிகரித்தது. மிகவும் பலவீனமாக இருந்த அவருக்கும் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் கவிதா சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். குழந்தை பெற்றெடுத்த 3 நாட்களில் டெங்கு காய்ச்சலால் தாய் உயிரிழந்துள்ள சம்பவம் அந்த பகுதி மக்களிடம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் தங்கள் கிராமங்களில் டெங்கு உயிரிழப்புகள் தொடர்ந்து நிகழ்வதாகவும் அரசு உடனடியான நடவடிக்கை எடுக்குமாறும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.   

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close