[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை
  • BREAKING-NEWS சிலைக்கடத்தல் வழக்கில் ரன்வீர்ஷா கூட்டாளி கிரன்ராவின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
  • BREAKING-NEWS சபரிமலை வழக்கின் தீர்ப்பை அமல்படுத்த அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் தேவசம்போர்டு மனு தாக்கல்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.46 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.44 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
  • BREAKING-NEWS முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS கஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது

விவசாயத் தோட்டத்தில் பிடிப்பட்ட முதலை

crocodile-caught-in-paddy-fields

சத்தியமங்கலம் அருகே மலைக்கிராம விவசாயத் தோட்டத்தில் முதலை ஒன்று பிடிபட்டது அங்குள்ள இளைஞர்கள் முதலையை சாமர்த்தியமாக பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்துள்ளனர். 

ஈரோடு  மாவட்டம் சத்தியமங்கலம் அருகே அடர்ந்த காட்டுப்பகுதியான குன்றியில் உள்ள விவசாய தோட்டம் ஒன்றில், முதலை புகுந்தது. இதுபற்றி தகவல் அறிந்ததும் அங்கு கிராம மக்கள் குவிந்தனர். குன்றி பகுதியை சேர்ந்த இளைஞர்கள், முதலையை சாமர்த்தியமாக பிடித்து அதன் வாயில் கயிறு கட்டி தூக்கி வந்தனர். இது குறித்து வனத்துறையினருக்கு இளைஞர்கள் தகவல் அளித்ததையடுத்து அங்கு வந்த வனத்துறையினர், அதனை பெரியகுன்றி பள்ளத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு முதலையை கட்டியிருந்த கயிறுகளை அவிழ்த்து பள்ளத்தில் விடுவித்தனர். அடர்ந்த காட்டுப்பகுதியில் முதலை சிக்கியது இதுவே முதல்முறை என்றும் தெரிவித்தனர். குன்றி பகுதியில் பண்ணை நிலங்கள் உள்ளதாகவும் அங்குள்ள பண்ணை உரிமையாளர்கள் முதலை வளர்த்திருக்கலாம் என்றும் அங்கிருந்து முதலை தப்பியிருக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close