[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கனமழை காரணமாக தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
  • BREAKING-NEWS நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு
  • BREAKING-NEWS கோயம்புத்தூர் - பொள்ளாச்சி உள்ளிட்ட 3 புதிய ரயில் சேவைகள் இன்று அறிமுகம்
  • BREAKING-NEWS இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு

சென்னை தொழிற்சலைகளில் புகுந்த தண்ணீர்

flood-water-inside-of-chennai-sidco

சென்னையில் கனமழை காரணமாக வீடுகளில் மட்டுமல்ல, தொழிற்சாலைகளிலும் தண்ணீர் புகுந்துள்ளது.

சென்னை வியாசர்பாடி தொழிற்பேட்டையில், 200க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இருக்கின்றன. இவற்றில் பெரும்பாலனவற்றில் தண்ணீர் புகுந்துள்ளது. நேற்றிரவில் இருந்து தொழிற்சாலை பகுதியில் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது. ‌இதன் காரணமாக தொழிற்சாலைகள் செயல்படாததால் தொழிலாளர்களுக்கும் வேலை இல்லை.

25 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவரும் வியாசர்பாடி சிட்கோ ‌பகுதியில் மோசமான சாலைகள், மழையால் மேலும் பாதிக்கப்பட்டுள்ளதால் மழைநேரத்தில் பலரும் விழுந்து காயம் அடைவதாக தொழிலாளர்கள் கூறுகிறார்கள்.

சிட்கோ நிர்வாகத்தின் கீழ் செயல்படும் வியாசர்பாடி தொழிற்பேட்டையின் குறைகளை சரிசெய்ய இனியாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொழிலாளர்கள் வலியுறுத்துகிறார்கள்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close