[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவின் கருத்து கேட்பு கூட்டம்
  • BREAKING-NEWS மாலத்தீவில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி
  • BREAKING-NEWS தேர்தலுக்கு பின்பும் பாஜகவுடன் திமுக கூட்டணி வைக்காது: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ‘கச்சா எண்ணெய் உற்பத்தியை உயர்த்த முடியாது’: சவுதி அரேபியா திட்டவட்டம்
  • BREAKING-NEWS ரஃபேல் விவகாரம்: ஊழல் ஒழிப்பு ஆணையத்தை இன்று அணுகுகிறது காங்கிரஸ்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS செல்போனை திருடியதாக சிறுவன் அடித்துக்கொலை

மின்சாரம் தாக்கி பலியான சிறுமிகள்: ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

highcourt-order-for-kodungaiyur-child-death-fund

சென்னை கொடுங்கையூரில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 2 சிறுமிகளின் குடும்பத்துக்கு, தலா 10 லட்ச ரூபாய் நிவாரணம் ‌வழங்கவேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கொடுங்கையூர் பகுதியில் நேற்று முன்தினம் வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்த யுவஸ்ரீ, பாவனா என்ற இரண்டு சிறுமிகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். இதையடுத்து மின்வாரிய பணியாளர்கள் 8 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். அத்துடன் அரசு சார்பில் சிறுமிகளின் குடும்பத்துக்கு  நிவாரணத் தொகையும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஜான் வில்லியம்ஸ் என்பவர் சிறுமிகள் இறந்த சம்பவம் தொடர்பாக கூடுதல் நிவாரணம் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 2 சிறுமிகளின் குடும்பத்துக்கு, தலா 10 லட்ச ரூபாய் நிவாரணம் ‌வழங்கவேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. அத்துடன் நிவாரணத் தொகையை ஏழு நாள்களுக்குள் வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் இதுபோன்ற உயிரிழப்பு சம்பவங்கள் நடைபெறாமல் தவிர்க்கத் தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் எனவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. 

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close