[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புதுச்சேரியில் அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ்
  • BREAKING-NEWS காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு அக்.2இல் சென்னையில் டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு
  • BREAKING-NEWS எம்எல்ஏ கருணாஸை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி மறுத்தது எழும்பூர் நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஆதார் அடையாள அட்டை செல்லும் - உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் செப்டம்பர் 28 முதல் 30ம் தேதி வரை கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு- இந்திய வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.13 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.36 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலிக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது

செல்போன் சேவை தடைபடக் கூடாது: தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அரசு உத்தரவு

cellphone-service-should-not-be-interrupted-government-orders-to-telecommunication-companies

பருவமழையால் செல்போன் சேவை தடைபடாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு தமிழக முழுவதும் கொட்டி தீர்த்த கனமழையால் அனைத்து செல்போன் நிறுவனங்களும் சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைத்தன. இதனால் பொதுமக்கள் அவசர தேவைக்கு செல்போனை பயன்படுத்த முடியாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாயினர். இந்நிலையில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் பல இடங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதனால் செல்போன் சேவை தடைபடாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தனியார் தொலைத்தொடர்பு  நிறுவனங்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல் மின்சார சேவையும் தடைபடாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 15 மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நிலைமையை கண்காணித்து வருவதாகவும் அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனம் தனது சேவை தடைப்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறியுள்ளது.  

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close