[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கோழிப்பண்ணை உரிமையாளர்கள் சோளத்தை வரியின்றி இறக்குமதி செய்ய அனுமதிக்க வேண்டும்- பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
  • BREAKING-NEWS கர்நாடக சட்டப்பேரவையில் வரும் 18ம் தேதி காலை 11 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது
  • BREAKING-NEWS முன்னாள் அமைச்சர் கல்ராஜ் மிஷ்ரா ஹிமாச்சல பிரதேசத்தின் புதிய ஆளுநராக நியமனம் . ஹிமாச்சல் ஆளுநராக இருந்த ஆச்சார்யா தேவ்ரட் குஜராத் ஆளுநராக பணியிடமாற்றம்
  • BREAKING-NEWS ‘பெருங்களத்தூர் டூ சிங்கப்பெருமாள் கோவில்- 8 வழிச்சாலை’ : முதல்வர் அறிவிப்பு
  • BREAKING-NEWS தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏவுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் மசோதாவுக்கு மக்களவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது

சென்னையில் மின்சார ரயில் சேவையில் பாதிப்பில்லை: ரயில்வே அறிவிப்பு

electric-train-service-not-affected-in-chennai

சென்னையில் மழை காரணமாக மின்சார ரயில் சேவையில் பாதிப்பில்லை என ரயில்வே நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் நேற்றிரவும் மழை கொட்டித் தீர்த்தது. இதனால் சாலையில் ஆங்காங்கே வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். போக்குவரத்து நெரிசலும் பல இடங்களில் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் சென்னையில் மழை காரணமாக மின்சார
ரயில் சேவையில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என ரயில்வே நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் மின்சார ரயில்சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் மின்சார ரயில் வழக்கம்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close