[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இலங்கை குண்டு வெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 140 ஆக உயர்வு
  • BREAKING-NEWS மதுரையில் வாக்குப்பதிவு இயந்திரம் உள்ள அறைக்குள் நுழைந்த பெண் வட்டாட்சியர் சம்பூர்ணம் சஸ்பெண்ட்
  • BREAKING-NEWS பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு அட்டவணை வெளியீடு; பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 3ம் தேதி தொடங்குகிறது
  • BREAKING-NEWS பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 8 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையத்துக்கு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ பரிந்துரை
  • BREAKING-NEWS திருச்சி அருகே கோயில் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி

கந்துவட்டி கொடுமையால் மூவர் உயிரிழந்த சம்பவம்: காவல்துறை விளக்கம்

nellai-collector-office-suicide-issue


கந்துவட்டி கொடுமை குறித்து 6 முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அதுகுறித்து காவல்துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

நெல்லையில் கந்துவட்டி கொடுமை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீக்குளித்தனர். இவர்களில் ஒரு பெண், அவரது 2 குழந்தைகள் உயிரிழந்தனர். பெண்ணின் கணவர் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார். சம்பவம் தொடர்பாக வட்டிக்கு பணம் கொடுத்த தளவாய் ராஜ் என்பவரை கைது செய்த போலீஸார், மேலும் இருவர் மீது வழக்கு பதிந்துள்ளனர். இந்நிலையில் கந்துவட்டி கொடுமை குறித்து 6 முறை புகார் அளித்தும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை  என உயிரிழந்தவர்களின் உறவினர்கள் குற்றம்சாட்டினர்.

அதுகுறித்து காவல்துறை தரப்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில், புகார் தொடர்பாக மனுதாரர் சுப்புலட்சுமி மற்றும் எதிர்மனுதாரர் முத்துலட்சுமி ஆகியோருக்கு விசாரணைக்கு ஆஜராக கடந்த மாதத்தில் 3 முறையும், இந்த மாதத்தில் ஒருமுறையும் அழைப்பு விடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது. அதேபோல், பதிவுத் தபால் மூலமும் அழைப்பாணை அளிக்கப்பட்டதாகவும் காவல்துறை கூறியுள்ளது. ஆனால், மனுதாரர் ஊரில் இல்லை என்பது தெரியவந்ததாகவும், எதிர்மனுதாரர் முத்துலட்சுமி மட்டுமே விசாரணைக்கு ஆஜரானதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. கடந்த 4 மாதங்களாக, காசிதர்மம் தற்காலிக குடியிருப்பில் சுப்புலட்சுமி இல்லை என்று கிராம நிர்வாக அலுவலரும் சான்று வழங்கியுள்ளதாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close