[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

இன்றும் நாளையும் மழை

rain-in-deepavali-day

மத்திய வங்க கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் 2 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று காலை முதலே இலேசான மழை பெய்தது. சென்னையில் காலையில் இருந்தே இலேசான மழை பெய்துகொண்டே இருந்தது. வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. 

இந்தநிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்தர் தெரிவித்துள்ளார். சென்னையில் மாலை அல்லது இரவில் அநேக நேரங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் என்றும் அவர் சொன்னார். காற்றழுத்த தாழ்வு பகுதியானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வடமேற்கு திசை நோக்கி நகரும் எனவும் அவர் கூறினார்.


 

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close