[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை தள்ளி வைக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சுயேச்சை வேட்பாளர் மனு
  • BREAKING-NEWS ராஜிவ்காந்தி குறித்து பேசியதை திரும்பப்பெற முடியாது; கைதுக்கும் நான் பயப்படப்போவதில்லை - சீமான்
  • BREAKING-NEWS பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் அம்ரேஷ்வர் பிரதாப் சாஹியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை
  • BREAKING-NEWS ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பிரெக்ஸிட் உடன்பாடு ஏற்பட்டது - பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்

நெல்லையில் தீபாவளியையொட்டி மும்முரமாக தயாராகும் கருப்பட்டி அல்வா

karupatti-halwa-making-work-in-nellai

நெல்லையில் தீபாவளி பண்டிகையையொட்டி கருப்பட்டி அல்வா தயாரிக்கும் பணி மும்முரம் அடைந்துள்ளது.

பொதுவாக திருநெல்வேலி என்றாலே அல்வாதான் நினைவுக்கு வரும். உறவினர்கள் நண்பர்கள் யாராவது திருநெல்வேலிக்கு செல்கிறேன் என்று கூறினால் அவர்களிடம் வரும்போது மறக்காமல் திருநெல்வேலி அல்வா வாங்கி வாருங்கள் என்று கூறுவது இன்றும் பழக்கத்தில் உள்ளது.

இந்நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி கருப்பட்டி அல்வா தயாரிக்கும் பணி நெல்லையில் மும்முரம் அடைந்துள்ளது. திசையன்விளையில் தயாராகும் கருப்பட்டி அல்வா ஆனது, சுத்தமான உடன்குடி கருப்பட்டி, சம்பா, கோதுமை, பால், முந்திரி பருப்பு, தேங்காய் பால், ஏலக்காய், சுக்கு ஆகியவைகளை கொண்டு தயாரிக்கப்படுகிறது. வழக்கமான அல்வா தயாரிக்கும் போது சேர்க்கப்படும் சீனிபால் இதில் சேர்ப்பது இல்லை. அதற்கு பதிலாக கருப்பட்டி சேர்க்கப்படும். கருப்பட்டியில் சுண்ணாம்பு சத்து உள்ளது. கோதுமை, சர்க்கரை நோயாளிகளின் உணவாகும். எனவே கருப்பட்டி, கோதுமை பால் மூலம் தயாரிக்கப்படும் கருப்பட்டி அல்வாவை சர்க்கரை நோயாளிகள் விரும்பி சாப்பிடுகிறார்கள். பண்டிகை நாட்களில் இங்கிருந்து வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் கருப்பட்டி அல்வாவை வாங்கி செல்கிறார்கள்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close