[X] Close
JUST IN
 • BREAKING-NEWS கடலூரில் ஆய்வு மேற்கொள்ள சென்ற ஆளுநர் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் கருப்புக்கொடி ஏந்தி பேரணி
 • BREAKING-NEWS பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் குளிக்க 15வது நாளாக தடை விதிப்பு
 • BREAKING-NEWS திருவாரூர், நாகை, புதுச்சேரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது
 • BREAKING-NEWS அனைத்து விவசாய சங்கங்கள் சார்பில் கன்னியாகுமரியில் இன்று முழு அடைப்பு போராட்டம்
 • BREAKING-NEWS டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது
 • BREAKING-NEWS சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் வரும் 26ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை ரசிகர்களை சந்திக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்
 • BREAKING-NEWS இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் 16 பேர் முதற்கட்டமாக விடுதலை
 • BREAKING-NEWS ஒகி புயலால் கடலில் சிக்கிய தமிழக மீனவர்கள் 433 பேரை காணவில்லை: உள்துறை அமைச்சகம்
 • BREAKING-NEWS எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான புகார்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்க உச்சநீதிமன்றம் அனுமதி
 • BREAKING-NEWS ராஜஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்ட ஆய்வாளர் பெரியபாண்டியனின் உடல் சென்னை வந்தது
 • BREAKING-NEWS திருச்செந்தூர் முருகன் கோயிலில் வள்ளி குகை அருகே பிரகார மண்டபம் இடிந்ததில் பெண் ஒருவர் பலி
 • BREAKING-NEWS ஜிஷா கொலை வழக்கில் குற்றவாளி அமிருல் இஸ்லாமிற்கு தூக்கு தண்டனை- எர்ணாகுளம் நீதிமன்றம்
 • BREAKING-NEWS ஜெ. மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் தீபக் ஆஜர்
 • BREAKING-NEWS விஏஓ தேர்விற்கு கன்னியாகுமரி மக்கள் விண்ணப்பிக்க காலநீட்டிப்பு செய்வது பற்றி பரிசீலிக்கப்படும் - அமைச்சர் ஜெயக்குமார்
தமிழ்நாடு 13 Oct, 2017 07:08 PM

டெங்குவை நுழைய விடமாட்டோம்: ராஜேந்திர பாலாஜி

rajendra-balaji-about-dengue-in-viruthunagar

விருதுநகர் மாவட்டத்தில் டெங்கு நுழையாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார். 

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிவகாசியில் இன்று நடைபெற்ற மாரத்தான் போட்டியை பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “விருதுநகர் மாவட்டத்தில் டெங்குவின் தாக்கம் குறைவு என்பதை ஆட்சியரிடம் ஆலோசனை மேற்கொண்டதன் மூலம் தெரிந்துகொண்டேன். இருப்பினும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளும், சிகிச்சை அளிப்பதற்கு ஆராம்ப சுகாதார மையங்களும் தயாராக உள்ளன. அவ்வாறு டெங்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தால், அந்த பகுதிகளுக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் விரைந்து சென்று நடவடிக்கை எடுக்கும் பணியை மாவட்ட நிர்வாகம் முடுக்கிவிட்டுள்ளது. இந்த பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. டெங்குக் காய்ச்சல் விருதுநகர் மாவட்டத்தில் நுழையாத அளவிற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம், இந்த நடவடிக்கை தொடரும்.” என்று கூறினார்.
 

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close